விஜய் - 69 படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது. இப்படம் உலகளவில் ரூ. 430 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
தொடர்ந்து, ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள கடைசி திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது.
கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்க அனிருத் இசையமைக்கிறார். 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு அக். 5 ஆம் தேதி துவங்குவதாகும் நாயகியாக பூஜா ஹெக்டேவும் வில்லனாக நடிகர் பாபி தியோலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாபி தியோல் அனிமல் படத்தின் மூலம் பெரிய கவனம் பெற்றார். சூர்யாவின் கங்குவா படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.
விஜய் அரசியலுக்கு வந்தததைத் தொடர்ந்து விழுப்புரத்தில் தன் முதல் மாநாட்டை நடத்தவுள்ளார். மாநாடு முடிந்ததும் இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனத் தெரிகிறது.