மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாளுக்கு, மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “காலங்கள் மாறலாம், தொழில் நுட்பங்கள் கூடலாம், சினிமாவின் முகமே மாற்றத்துக்கு இலக்காகியிருக்கலாம்.
ஆனால், நடிப்புக் கலையின் உச்சம் என்பது எப்படி இருக்கும் என்று காட்டிய மாபெரும் கலைஞன் சிவாஜி சாரின் பங்களிப்பு மறக்கவொண்ணாதது. பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்துகாட்டியவரை பிறந்த நாளில் வணங்குகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாளுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.