திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்!

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் புரோமோ குறித்து...

News image

ரஜினி, கமல், நெல்சன், அனிருத். - படம்: யூடியூப் / ரெட் ஜெயண்ட் மூவிஸ்.

Updated On :21 பிப்ரவரி 2026, 12:51 pm IST

நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் புரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

குறிப்பாக, யார் ஹீரோ என ரஜினி, கமல் இருவரும் இயக்குநர் நெல்சனை கேள்வி கேட்கும் காட்சிகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினி, கமல் கூட்டணியை இயக்கும் நெல்சன்

வரலாறு எப்போதாவதுதான் மீண்டும் தன்னையே உயிர்ப்பிக்கும் என்ற வாசகத்துடன் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்ட போஸ்டர்களில் இருந்தே கமல், ரஜினி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

யார் இயக்குவார்கள் என்ற போட்டியில் இயக்குநர் நெல்சன் அந்த இடத்தைப் பிடித்துள்ளார். ஜெயிலர் படத்தின் வெற்றிதான் அவருக்கு இந்த இடத்தைப் பிடித்துக் கொடுத்திருக்கிறது.

இயல்பான நகைச்சுவைகள், ஸ்டைலான ஷாட்டுகள், அதே சமயத்தில் மாஸ் குறையாத காட்சிகள் என ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு சினிமாவில் இன்னொரு ரவுண்ட் வலம்வரும் வெற்றியைக் கொடுத்தார்.

ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்!

ரஜினி, கமல் இருவருமே மிகப்பெரிய நடிகர்கள் என்பதால் இருவர்களிடமும் ஈகோ பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கருதி அதையே தனது புரோமோவில் பயன்படுத்தி, நெல்சன் அசத்தி இருக்கிறார்.

மிகவும் ஸ்டைலான காட்சிகள் புரோமோவை மீண்டும் பார்க்கத் தோன்றுகிறது.

ஜெயிலர் 2 படத்துக்குப் பிறகு ரஜினி சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு கமலுடன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப் புரோமோவுக்கு ரசிகர்களிடம் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.

Summary

Who is the hero? Rajinikanth, Kamal's film director glims fans favorite Nelson!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.