லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

திரையரங்குகளில் வெளியாகும் ரஜினி - கமல் கூட்டணியின் புதிய பட புரோமோ!

ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் புரோமோ விடியோவின் வெளியீடு குறித்து...

ரஜினி, கமல்

Published On :

நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் புரோமோ விடியோ திரையரங்குகளில் வெளியாகின்றது.

தமிழ்த் திரையுலகின் முதன்மை நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் 47 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை “ரெட் ஜெய்ண்ட் மூவிஸ்” நிறுவனம் தயாரிக்கின்றது.

இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவதாகவும், அதற்கான புரோமோ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், இந்தப் புதிய திரைப்படத்தின் புரோமோ சனிக்கிழமை (பிப். 21) மதியம் 12.07 மணிக்கு குறிப்பிட்ட சில திரையரங்குகளில் வெளியாகும் எனவும், அதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையில் இப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரின் பிறந்த நாள் தேதிகளைக் குறிப்பிடும் விதமாக 12 மற்றும் 7 ஆகிய எண்களைக் கொண்ட நேரங்களில் இப்படத்தின் அப்டேட் வெளியிடப்படுகின்றன.

Summary

The promo video of the new film starring actors Rajinikanth and Kamal Haasan is being released in theaters.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.