வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சார இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு அம்முண்டி பஜனை கோவில் தெருவை சேர்ந்த ரித்திக் குமார் என்பவர் சொந்தமாக தேநீர் கடை ஒன்று நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இன்று(அக். 2) மதியம் உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு தனக்கு சொந்தமான 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சார இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, வீட்டின் அருகில் நிறுத்தியபோது இருசக்கர வாகனத்தின் அடிப்பகுதியில் திடீரென புகை வருவதைப் பார்த்துக் கொண்டிருந்த போது, திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலுமாக நாசமாகிவிட்டது.
மின்சார வாகனம் எரிந்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், ரத்தனகிரி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து வந்த ரத்தனகிரி காவல்துறையினர் இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.