மகிழ்ச்சி செய்தியை அறிவித்த பிரபல சின்னத்திரை தம்பதி!

கருவுற்று இருப்பதை தெரிவித்த சின்னத்திரை நடிகை நிவேதிதா.
nivedhitha
சுரேந்தர் - நிவேதிதா திருமணம்படம்: இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
1 min read

திருமகள் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சுரேந்தர் - நிவேதிதா தம்பதியினருக்கு விரைவில் குழந்தைப் பிறக்கவுள்ளது. இதனை சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளனர்.

வாணி ராணி, திருமகள், கல்யாணபரிசு உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர் நடிகை நிவேதிதா. இவர் சமீபத்தில் நிறைவடைந்த திருமகள் தொடரில் வில்லி பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர்.

இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு மகராசி தொடர் நாயகன் ஆர்யனுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக நிவேதிதா - ஆர்யன் பிரிந்தனர்.

இதனைத் தொடர்ந்து, திருமகள் தொடரில் நடித்துக்கொண்டு இருக்கும்போது, நாயகன் சுரேந்தர் உடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து நிவேதிதா, சுரேந்தர் உடன் காதலில் இருப்பதாக சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் அறிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் சுரேந்தர் - நிவேதிதாவுக்கு உற்றார் உறவினர் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், நடிகை நிவேதிதா தான் கருவுற்று இருப்பதாக இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்த சுரேந்தர் - நிவேதிதாவுக்கு, அவர்களடைய ரசிகர்கர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com