பிக் பாஸ் சீசன் 8 போட்டி தொடங்கிய 24 மணிநேரத்தில் முதல் போட்டியாளர் எவிக்சன் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 7 சீசன்களை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், பிக் பாஸ் சீசன் 8-ஐ நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் போட்டியில், முதல் நாளான நேற்று 18 போட்டியாளர்களை அறிமுகம் செய்து நடிகர் விஜய் சேதுபது வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.
இந்த சீசனில், தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகர் ரஞ்சித், நடிகை சாச்சனா, தர்ஷா குப்தா, சின்னத்திரை நடிகர் தீபக், சத்யா, அருண் பிரசாத், விஜே விஷால், விஜே ஆனந்தி, சுனிதா, கானா ஜெப்ரி, செளந்தர்யா நஞ்சுண்டன், தர்ஷிகா, முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க : தொடங்கியது பிக் பாஸ் 8! 18 போட்டியாளர்கள் அறிமுகம்!
முதல் நாளே எவிக்சன்
நேற்றைய அறிமுக நிகழ்ச்சியின் நிறைவில், 24 மணிநேரத்தில் முதல் போட்டியாளர் எவிக்சன் முறையில் வெளியேற்றப் படுவார் என்று விஜய் சேதுபதி அறிவித்தது போட்டியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், முதல் நாளில் ஒரு போட்டியாளரை எவிக்சன் செய்யும் நடைமுறை தொடங்கியது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
சாச்சனா வெளியேற்றம்
முதல் நாள் எவிக்சனில் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சாச்சனாவை வெளியேற்றியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
24 மணிநேரம் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் போட்டியை காணும் ரசிகர்கள், சாச்சனா வீட்டில் இல்லாததை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.
மேலும், போட்டி தொடங்கி 24 மணிநேரத்துக்குள் ஒரு போட்டியாளரை எதன் அடிப்படையில் வெளியேற்றப்படுகிறார் என்றும், சீக்ரட் ரூமில் சாச்சனா தங்கவைக்கப்படுவார் என்றும் கருத்துகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குற்றாலம் சீசன்: வாரத்தில் 3 நாள்கள் கனரக வாகனங்களுக்குத் தடை

ஹைதராபாதில் வில்வித்தை ப்ரீமியா் லீக்

இன்றைய செய்திகள் ஜூன் 1 - நேரலை!

இனி பொதுமக்களும் பிக் பாஸில் பங்கேற்கலாம்! பிக் பாஸ் காமன்மேன்!
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu


