சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்! வெற்றி வீடு! பாமணி இல்லத்தில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! நகராமல் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு

பிக் பாஸ் 10: இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் இவர்தான்!

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரத்துடன் வெளியேறிய போட்டியாளர் குறித்து...

bigg boss 10 update

ஷமா, ஜேசன் - எக்ஸ்

Updated On :

காமன்மேன் பிரதிநிதியாக பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிவந்த ஷமா, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

எவிக்‌ஷன் விலக்கு டிக்கெட்டை வென்றிருந்தபோதும், அதனை அவர் பயன்படுத்தாததால், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் 7 வாரங்களை நிறைவு செய்துள்ளது. அதாவது ஞாயிற்றுக்கிழமையான இன்றுடன் 50 வது நாளை எட்டியுள்ளது.

இந்த வாரத்தின் இறுதியில் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ள போட்டியாளர்களின் குறைந்த வாக்குகளைப் பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார்.

அந்தவகையில் இந்த வாரத்தில் ஷமா, முத்தழகி, அக்‌ஷிதா, அஸ்மிதா ஆகியோர் வெளியேற்றப்படும் நபர்களின் பட்டியலில் இருந்தனர்.

ஷமா, முத்தழகி, அக்‌ஷிதா, அஸ்மிதா

ஷமா, முத்தழகி, அக்‌ஷிதா, அஸ்மிதா

இவர்களில் குறைந்த வாக்குகளைப் பெற்றதாக ஷமா வெளியேற்றப்பட்டுள்ளார். பிக் பாஸ் போட்டியில் வென்று பரிசாகப் பெற்ற எவிக்‌ஷன் விலக்கு டிக்கெட்டை இம்முறை ஷமா பயன்படுத்தியிருந்தால், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியிருக்க மாட்டார். ஆனால், அந்த டிக்கெட்டை இந்த வாரம் பயன்படுத்த விரும்பவில்லை என தொகுப்பாளர் ரம்யா கிருஷ்ணனிடம் ஷமா கூறிவிட்டார்.

இதனால் எதிர்பாராத விதமாக ஷமா வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. அவரிடம் இருந்த நாமினேஷன் விலக்கு டிக்கெட்டும் பயனற்றதாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் அனைவரிடமும் வம்பிழுக்கும் நபராக உள்ள ஜேசனைக் கண்டு அஞ்சாமல், அவருடன் நேருக்கு நேர் நின்று வாக்குவாதத்தில் ஈடுபடும் வெளிப்படையான பெண்ணாக ஷமா இருந்தார்.

தற்போது அவர் வெளியேற்றப்பட்டுள்ளதால், ஜேசனும் அவரின் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், ஷமா போன்ற சிறந்த போட்டியாளர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கக் கூடாது எனவும் பிக் பாஸ் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Summary

bigg boss 10 update shama jason koushi ttf vasan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER