பிக் பாஸ் 10: இந்த வாரம் வெளியேறிய இருவர் யார்?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இருவர் வெளியேறிய இருவர் யார் என்பது குறித்து...

விஜய் சேதுபதி - படம்: எக்ஸ்
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து, இந்த வாரம் 2 பேர் வெளியேறி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி 6வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துக்கான ஆளும் அணி தலைவராக அடாவடி அன்சர் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். எதிர் அணித் தலைவராக தன்யா நியமிக்கப்பட்டு இருந்தார். இந்த வாரம் முழுவதும் டான்ஸ் மரத்தான் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இதனிடையே, 6வது வாரத்திற்கான நாமினேஷன் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள், இந்தப் போட்டியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவருக்கு வாக்களிக்க வேண்டும்.
இதன் அடிப்படையில், இந்த வாரம் நாமினேஷனுக்கு அஷ்மிதா, அவினாஷ், சாந்தினி, கரிஷ்மா, முகேஷ், ஷமா, ஷாதிகா, டிடிஎஃப் வாசன் ஆகியோரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்திருந்தனர்.
இந்த வாரம் முழுவதும், இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு மக்கள் வாக்களித்திருந்த நிலையில், இதில் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
இந்த நிலையில், குறைந்த வாக்குகளைப் பெற்ற சாந்தினி தமிழரசன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
அதேபோல, உடல்நலப் பிரச்னை காரணமாக, நடிகர் ராகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியிருப்பதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
Summary
Reports suggest that two contestants have been eliminated from Bigg Boss Season 10 this week.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


