பிக் பாஸ் 10: இந்த வாரம் காதலர்களென்று விமர்சிக்கப்பட்ட இருவர் வெளியேற்றம்!
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் குறித்து...

விஜய் சேதுபதி - படம்: ஜியோ ஹாட்ஸ்டார்
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து, இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி இருப்பதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
இதற்குள் போட்டியாளர்கள் தங்களை நிரூபித்து, இறுதி வாரத்துக்குள் செல்ல வேண்டும். இந்தச் சூழலில் போட்டியாளர்கள் முனைப்புடன் விளையாடி வருகின்றனர்.
இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டூ ஃபினாலே பில்டப் சுற்று நடத்தப்பட்டது. இதில் அதிக மதிப்பெண் பெற்று, தன்யா தேர்வானார். இவருக்கான சலுகை டிக்கெட் டூ ஃபினாலே சுற்றில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, 11வது வாரத்திற்கான நாமினேஷன் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள், இந்தப் போட்டியில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் இருவருக்கு வாக்களிக்க வேண்டும்.
இதன் அடிப்படையில், இந்த வாரம் நாமினேஷனுக்கு ஜேசன், முகேஷ், லட்சுமி பிரியா, டிடிவி வாசன், முனியம்மாள், ஷாதிகா, பிருத்வி ஆகிய 7 பேர் தேர்வாகி இருந்தனர்.
இந்த வாரம் முழுவதும், இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு மக்கள் வாக்களித்திருந்த நிலையில், குறைந்த வாக்குகளைப் பெற்ற முகேஷ், ஷாதிகா ஆகிய இருவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.
முகேஷ், ஷாதிகா ஆகிய இருவரும் காதலர்கள் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த வாரம் இருவரும் ஒன்றாக வெளியேறியிருக்கின்றனர்.
Summary
Reports indicate that two contestants have been eliminated from Bigg Boss Season 10 this week as well.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


