அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!தில்லி ஜந்தர் மந்தர் இனி போராட்டம் நடத்தும் இடமில்லை! உள்துறை அமைச்சகம்! தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

பிக் பாஸ் 10: டிடிஎஃப் வாசனுக்கு ரசிகர்கள் ஆரவாரம்! கைதட்டல்களால் உடைந்த முனியம்மாவின் நம்பிக்கை!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிடிஎஃப் வாசனுக்கு கிடைக்கும் வரவேற்பால் நம்பிக்கை இழக்கும் முனியம்மாள் குறித்து...

TTF Vasan Muniyamma's confidence

முனியம்மாள் / டிடிஎஃப் வாசன் - எக்ஸ்

Published On :

பிக் பாஸ் சீசன் 10-ன் வார இறுதி நிகழ்ச்சியில் டிடிஎஃப் வாசனுக்கு ரசிகர்கள் பலர் ஆரவாரம் செய்தனர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்து ஒரு வாரம் மட்டுமே ஆன நிலையில், ரசிகர்கள் பலரின் பாராட்டு கிடைப்பது முனியம்மாவுக்கு ஆச்சரியமாகவே இருந்துள்ளது. இதனால் நிகழ்ச்சி முடிந்த பிறகும் வாசனுக்கு கிடைத்த கைதட்டல்கள் குறித்து பல்வேறு இடங்களில் பேசி வருகிறார்.

கடந்த சில வாரங்களாக வலுவான போட்டியாளர்களில் ஒருவராக இருந்த முனியம்மாளின் நம்பிக்கை, ஒரு வாரம் மட்டுமே ஆன போட்டியாளருக்கு கிடைத்த கைதட்டல்களால் உடைந்துள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 6வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த வாரத்தில் எந்தவொரு போட்டியாளரும் வெளியேற்றப்படவில்லை. கடந்த வாரம் முழுக்கவே போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடியதால், யாரும் வெளியேற்றப்படவில்லை.

இதுமட்டுமின்றி வைல்டு கார்டு போட்டியாளர்களாக டிடிஎஃப் வாசன், அக்‌ஷிதா மற்றும் காமன்மேன் நிகழ்ச்சியில் இருந்து கரீஷ்மா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த வார இறுதியில் நடந்த சம்பவங்கள் குறித்து போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி உரையாடினார். அப்போது டிடிஎஃப் வாசன் எழுந்து நிற்கும்போது ரசிகர்கள் பலர் கூச்சலிட்டு கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இதற்கு முன்பு முனியம்மாள், ஷாதிகா என ஒருசிலருக்கு மட்டுமே இவ்வாறு நடக்கும் என்பதால் போட்டியாளர்கள் பலரின் கவனத்தை இச்சம்பவம் ஈர்த்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் சாதாரணமாக அமர்ந்து உணவு நேரத்தில் பேசிக்கொண்டு இருக்கும்போது கூட, வாசனுக்கு கிடைத்த கைதட்டல்கள் குறித்து முனியம்மாள் குறிப்பிட்டுப் பேசுகிறார். இது சாதாரணமானது என வாசன் விளக்கினாலும், மக்களிடம் அவர் சென்று சேர்ந்துள்ளதை முனியம்மாள் சுட்டிக்காட்டுகிறார்.

நாமினேஷனில் இடம்பெற்றால் கூட உங்களுக்காக விசில் அடிப்பவர்கள் உங்களுக்கு வாக்களித்து உள்ளேயே இருக்க வைப்பார்கள் என முனியம்மாள் கூறுகிறார். இதுநாள் வரை எங்களுக்கு கிடைத்த கொஞ்ச கைதட்டல்களை நினைத்து சந்தோஷப்பட்டோம்; ஆனால், அதனை உடைத்துவிட்டாயே தம்பி என வாசனிடம் முனியம்மாள் கூறுகிறார்.

Summary

Bigg boss 10 tamil Fans cheer for TTF Vasan Muniyamma's confidence shattered by the applause

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER