நடிகை தன்யாவுக்காக அழுத டிடிஎஃப் வாசன்! பிக் பாஸில் நெகிழ்ச்சி!
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகை தன்யாவுக்காக டிடிஎஃப் வாசன் அழுத விடியோ இணையத்தில் வைரலானது குறித்து...

டிடிஎஃப் வாசன் - தன்யா - எக்ஸ்
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகை தன்யாவுக்காக டிடிஎஃப் வாசன் அழுத விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
தன்யாவும் அவினாஷும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நபர்களின் பட்டியலில் இடம்பெற்றிந்ததால், தன்யா எலிமினேட் ஆகிவிடுவாரோ என்ற அச்சத்தில் வாசன் கண்ணீர் விட்டு அழுதார். அவரை தன்யா சமாதானம் செய்தார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 11 வது வாரத்தை எட்டியுள்ளது. பிக் பாஸ் ஆட்டம் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், கடந்த வாரத்தில் குறைந்த வாக்குகளைப் பெற்றதாக நடிகை முத்தழகி மற்றும் நடிகர் அவினாஷ் வெளியேற்றப்பட்டனர்.
முதலில் முத்தழகி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரைத் தொடர்ந்து கார் மூலம் வெளியேற்றும் நடைமுறையை பிக் பாஸ் கொண்டுவந்தார்.
அதாவது குறைந்த வாக்குகளைப் பெற்றவர்கள் பட்டியலில் உள்ள தன்யா, அவினாஷ் ஆகிய இருவரையும் அழைத்துச் செல்ல ஒரு கார் கொண்டுவரப்படும். அதில் இருவரும் ஏற வேண்டும். அவர்களை ஏற்றிக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து கார் புறப்படும். கார் திரும்ப வரும்போது அதில் ஒருவர் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குத் திரும்புவார்.
மற்றொரு நபர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவர். அந்தவகையில் காரில் சென்ற தன்யா, அவினாஷ் ஆகியோரில் தன்யா மட்டுமே காரில் மீண்டும் பிக் பாஸ் இல்லத்திற்குத் திரும்பினார்.
பிக் பாஸ் வீட்டிற்குத் திரும்பிய தன்யா, டிடிஎஃப் வாசனிடம் சென்று, இதற்குப்போய் அழுவியா என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த வாசன், யார் அழுதா, கண்ணு வேர்க்குது என பதில் அளித்தார்.
தன்யா - வாசன் இடையிலான நட்பின் ஆழம் இதில் தெரிவதாக பலர் அந்த விடியோவில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Summary
bigg boss 10 TTF Vasan sheds tears for actress Thanya! A touching moment on Bigg Boss
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


