மேகேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் மேலிடத்திற்கு முதல்வர் விஜய் அழுத்தம் கொடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்! நவ. 18-ல் தவெகவின் 2 ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்! சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்நாட்டைக் கட்டமைப்பதில் பழங்குடியின சமூகம் ஈடு இணையற்ற பங்களிப்பு: பிரதமர் மோடிகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

பிக் பாஸ் 10: விஜய் சேதுபதிக்கு எதிராக ஜேசன்! போட்டியில் நீடிப்பாரா?

விஜய் சேதுபதி - ஜேசன் இடையிலான வாக்குவாதம் குறித்து...

jason vijay sethupathi

ஜேசன் / விஜய் சேதுபதி - எக்ஸ்

Updated On :

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றுள்ள ஜேசன் கெளசிக்கிற்கு ஆட்டத்தை புரியவைப்பது கடினம் என தொகுப்பாளரும் நடிகருமான விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜேசனும் போட்டி மனப்பான்மையுடன் பேசியதால், அவர் நிகழ்ச்சியில் நீடிக்கத் தகுதியற்றவர் என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 10 வாரங்களை நிறைவு செய்துள்ளது. இந்த வாரம் முழுவதுமே எதிர்பாராத திருப்பங்களுடன் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே பிக் பாஸ் குரல் இனி வீட்டில் ஒலிக்காது என அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து ஒருவரை ஜூனியர் பிக் பாஸாகத் தேர்வு செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் ஜூனியர் பிக் பாஸின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என்றால், இடையில் மாற்றிக்கொள்ளலாம். ஆனால், வீட்டில் உள்ள அனைவரும் அதற்கு வாக்காளிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இதன்படி முதலில் வினோத் பாபுவும், இரண்டாவதாக முனியம்மாளும், மூன்றாவதாக அடாவடி அன்சரும் ஜூனியர் பிக் பாஸ் பொறுப்புகளை வகித்தனர்.

இந்த வாரம் நடந்தவற்றை வார இறுதியில் போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி கலந்துரையாடுவார். அந்தவகையில் இந்த வாரம் ஜேசனின் நடவடிக்கைகள் குறித்து விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார். ஆனால் அவர் அதற்கு பொறுப்புடன் பதில் கூறவில்லை.

மாறாக கேலி செய்யும் உடல்மொழியுடன் விஜய் சேதுபதியின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்த உடல்மொழி நன்றாக இல்லை; உங்களுக்கும் நல்லதில்லை என விஜய் சேதுபதி எச்சரித்த பிறகும், அதனையே தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்.

இதனால், அதிருப்தி அடைந்த விஜய் சேதுபதி, ஜேசனுக்கு ஆட்டத்தை புரியவைப்பது கடினம் என்பது மக்களுக்கும் தெரிந்துவிட்டது எனக் கூறுகிறார். இது தொடர்பான முன்னோட்ட விடியோவும் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடரும் தகுதி ஜேசனுக்கு இல்லை என்றும் அவர் போட்டியில் இருந்து வெளியேறும் நேரம் வந்துவிட்டதாகவும் ரசிகர்கள் பலர் அதில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Summary

Bigg Boss 10: Jason speaks out against Vijay Sethupathi! Will he remain in the competition?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.