கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியுடன் நடிகர் விமல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியுடன் நடிகர் விமலும் மேடையில் தோன்றியது குறித்து...

Actor vimal with Vijay Sethupathi in bb stage

விஜய் சேதுபதியுடன் நடிகர் விமல் - எக்ஸ்

Updated On :

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியுடன் நடிகர் விமலும் வார இறுதி நிகழ்ச்சியில் ஒரே மேடையில் தோன்றினார். இந்த வாரத்துக்கான நாமினேஷன் ஃபிரி பாஸ் என்ற பரிசை வழங்குவதற்காக விஜய் சேதுபதியுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 5 வாரங்களை நிறைவு செய்துள்ளது. 5வது வாரத்துக்கான ஆளும் அணித் தலைவராக அடாவடி அன்சரும், எதிர் அணித் தலைவியாக முத்தழகியும் இருந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வைரம் திருடும் போட்டி இந்த வாரத்தில் வைக்கப்பட்டது.

அதாவது பிக் பாஸ் வீட்டில் ஒரு வைரக்கல்லும் ஒரு போலி வைரக்கல்லும் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். இந்த வைரத்தை கொள்ளையடித்து போலியான வைரத்தை அந்த இடத்தில்வைக்க வேண்டும். வீட்டில் உள்ள எந்தவொரு போட்டியாளர் தேடினாலும் கிடைக்காத வகையில் அதனை பாதுகாப்பான இடத்தில் வைத்திருப்பவரே வெற்றியாளர்.

இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் வைரத்தை திருடி வைத்து சக போட்டியாளர்களை வாரம் முழுக்க தேட வைத்து டிடிஎஃப் வாசன் வெற்றி பெற்றார். இந்த வாரம் முழுக்கவே டிடிஎஃப் வாசனால் நிகழ்ச்சியில் சுவாரசியம் அதிகரித்து காணப்பட்டது.

கடந்த வாரத்தில் பல போட்டியாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்த டிடிஎஃப் வாசன், இந்த வார நிகழ்ச்சியின் நாயகனாக மாறியதால், ரசிகர்கள் பலர் அவரைக் கொண்டாடி வருகின்றனர்.

நிகழ்ச்சியை சுவாரசியப்படுத்தி போட்டியில் வெற்றி பெற்ற டிடிஎஃப் வாசனுக்கு நாமினேஷன் ஃபிரி பாஸ் பரிசாக வழங்கப்பட்டது. இதனை நடிகர் விமல் அளித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ரசிகரான விமல், இந்த வாரம் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதைக் காண நேரில் சென்றிருந்தார். இதனை எதிர்பாராத விஜய் சேதுபதி, விமலை மேடைக்கு அழைத்து பிக் பாஸ் குறித்துப் பேசுமாறு கேட்டுக்கொண்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மிகப்பெரிய ரசிகன் எனக் கூறிக்கொண்ட விமல், போட்டியாளர்களிடமும் உரையாடினார். பிக் பாஸ் மேடையில் விஜய் சேதுபதியுடன் நடிகர் விமலும் இருந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Summary

Bigg boss 10 tamil update Actor vimal with Vijay Sethupathi in bb stage

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.