
சண்டையிட நேரமில்லை; விளையாடு! பிக் பாஸ் வீட்டில் முகேஷுக்கு நடிகை ஷாதிகா அறிவுரை!
சண்டையிட நேரமில்லை; விளையாட்டில் கவனம் செலுத்து என முகேஷிடம் நடிகை ஷாதிகா தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் முகேஷ் / ஷாதிகா - எக்ஸ்
சண்டையிட நேரமில்லை விளையாட்டில் கவனம் செலுத்து என முகேஷிடம் நடிகை ஷாதிகா தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் நடக்கும் உயிர் காக்கும் டாஸ்க்கில் ஷாதிகா - அடாவடி அன்சர் ஒரு அணியாகவும், ஜேசன் - முகேஷ் ஒரு அணியாகவும் உள்ளனர். இப்போட்டியில் ஷாதிகா தனது அணிக்காக விளையாடி வருகிறார்.
முகேஷும் தனது அணிக்காக விளையாடி வருகிறார். இருந்தபோதும் தங்கள் அணிக்காக விளையாடுமாறு ஷாதிகாவிடம் பேச வேண்டும் என முகேஷிடம் ஜேசன் கூறுகிறார். ஷாதிகா உடனான உறவை தவறாகப் பயன்படுத்தி, விளையாட்டில் வெற்றி பெற வேண்டும் என நினைத்து முகேஷிடம் ஜேசன் இவ்வாறு கூறுகிறார்.
இருந்தபோதும், தனது நேர்மையான விளையாட்டுக்காக ஜேசனிடம் ஷாதிகா விடாப்பிடியாக சண்டையிடுகிறார். தான் நேர்மையாகவே விளையாடி வருகிறேன் என்றும் குறுக்கு வழியில் விளையாட வேண்டிய அவசியமில்லை எனவும் கூறுகிறார்.
அப்போது ஷாதிகா அருகே முகேஷ் வருகிறார். அவருடன் பேசுவதற்கு விருப்பம் இல்லாததைப்போல அமைதியாக இருக்கிறார் ஷாதிகா. நீண்ட நேரமாக ஷாதிகா முன்பு முகேஷ் நிற்கிறார். பின்னர் பேசிய ஷாதிகா, சண்டையிட நேரமில்லை; விளையாட்டில் கவனம் செலுத்து என அறிவுரை கூறுகிறார்.
நெருக்கமானவராகவே இருந்தாலும் போட்டி என்று வந்துவிட்டால் நேர்மையாக விளையாடும் ஷாதிகாவுக்கு ரசிகர்கள் பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
வாரம் முழுக்க ஒரே டாஸ்க்
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 5வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துக்கான ஆளும் அணி தலைவராக அக்ஷிதா தேர்வாகியுள்ளார். எதிரணி தலைவராக முனியம்மா பொறுப்பேற்றுள்ளார்.
இந்த வாரம் முழுக்க உயிரைக் காக்கும் போட்டி பிக் பாஸ் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் இரண்டு பேர் சேர்ந்து ஒரு அணியாக மாற வேண்டும். ஒவ்வொரு அணிக்கும் 10 உயிர்கள் கொடுக்கப்படும். போட்டியில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உயிரை தற்காத்து விளையாட வேண்டும். இறுதிவரை யார் அதிக உயிர்களுடன் இருக்கின்றனரோ அவரே இந்த வார போட்டியின் வெற்றியாளர்.
Summary
BIgg boss 10 tamil shathiga alert mukesh for individual game
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







