
வறுமையைக் கடந்து... பிக் பாஸ் வீட்டில் உணவுக்காக அழுத முனியம்மா!
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் காமன்மேன் பிரிவில் போட்டியாளராகப் பங்கேற்றுள்ள முனியம்மா, உணவுக்காக அழுதது குறித்து...

உணவுடன் முனியம்மா / அக்ஷிதாவுக்கு கைகூப்பி நன்றி தெரிவிக்கும்போது... - எக்ஸ்
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் காமன்மேன் பிரிவில் போட்டியாளராகப் பங்கேற்றுள்ள முனியம்மா, உணவுக்காக கண்ணீர் விட்ட காட்சிகள் இணையத்தில் பலரை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
நீண்ட நேரமாகப் பசியில் இருந்தபோது, இந்த வார தலைவராக உள்ள அக்ஷிதா உணவு எடுத்துவந்து கொடுத்ததும், அதை எடுத்து உண்டபோது முனியம்மா அடக்க முடியாமல் அழுதார்.
சிறுவயதில் உணவு சரியாகக் கிடைக்காத நாள்கள் நினைவுக்கு வந்துவிட்டதாகவும், அந்த நிலை திருமணத்துக்குப் பிறகு மாறியிருந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு முற்றிலும் மாறிவிடும் என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 5வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துக்கான ஆளும் அணி தலைவராக அக்ஷிதா தேர்வாகியுள்ளார். எதிரணி தலைவராக முனியம்மா பொறுப்பேற்றுள்ளார்.
இந்த வாரம் முழுக்க உயிரைக் காக்கும் போட்டி பிக் பாஸ் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் இரண்டு பேர் சேர்ந்து ஒரு அணியாக மாற வேண்டும். ஒவ்வொரு அணிக்கும் 10 உயிர்கள் கொடுக்கப்படும். போட்டியில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உயிரை தற்காத்து விளையாட வேண்டும். இறுதிவரை யார் அதிக உயிர்களுடன் இருக்கின்றனரோ அவரே இந்த வார போட்டியின் வெற்றியாளர்.
இப்போட்டியில் முனியம்மாவும் முத்தழகியும் அணி சேர்ந்துள்ளனர். நீண்ட நேரம் போட்டியில் விளையாடியதால் மிகுந்த பசியுடன் முனியம்மா இருந்துள்ளார். கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டதாக முத்தழகியிடம் கூறி, தக்காளியை எடுத்து சாப்பிடச் சென்றார். அது விதிமீறல் என்பதால், முத்தழகி தடுத்துவிட்டார்.
இதனைக் கண்ட எதிரணியின் அக்ஷிதா, சற்றும் தாமதிக்காமல் முனியம்மாவுக்கு உணவு எடுத்துவந்து கொடுத்தார். அதனை வாங்கி சாப்பிடத் தொடங்கிய முனியம்மா, திடீரென யாருக்கும் தெரியாமல் அழுதார்.

முனியம்மாவும் அக்ஷிதாவும்
இதனை கவனித்த அக்ஷிதா, முனியம்மாவை சமாதானப் படுத்தி அழுகைக்கான காரணம் குறித்து கேட்டார். அப்போது, பள்ளிப் பருவத்தில் பல நாள்கள் பசியுடன் இருந்துள்ளதாகவும், விடுதியில் இருந்தபோது கூட ஒழுங்காக உணவு கொடுக்கப்படவில்லை எனக் கூறினார்.
விடுதியை விட்டு வீட்டிற்கு ஓடிவந்தபோது தனது அப்பா கடுமையாக அடித்து மீண்டும் விடுதிக்கே அனுப்பிவிட்டதாகவும், ஆனால், பசியால் விடுதியை விட்டு ஓடிவந்ததை அப்பா அறியவில்லை எனவும் பேசினார்.
பசியில் இருக்கும்போது உணவு கொடுப்பவர்கள் தெய்வத்திற்குச் சமம் என்பார்கள்; நான் மனதார உனக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் என அக்ஷிதாவை நோக்கி கைகூப்பி வணங்கினார்.
தனது கணவரை திருமணம் செய்த பிறகு உணவுக்கு குறை இல்லை என்றும், இந்த நிலை பிக்பாஸுக்கு பிறகு முற்றிலும் மாறிவிடும் என அழுதவாறே உணவு உண்டார். அருகில் இருந்த அக்ஷிதா முனியம்மாவை கட்டி அணைத்துக்கொண்டார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
Summary
Bigg boss 10 tamil muniyamma emotional for food that gave by akshitha
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







