உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!மருத்துவத்துக்கான நோபல் பரிசு: மூவருக்குப் பகிர்ந்தளிப்பு!நாளை முதல் எரிபொருள் கூடுதல் கட்டணத்தை உயர்த்தும் இண்டிகோ! எஸ்ஐஆர் விவகாரம்: ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு!சென்னை பூங்காவிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் இயக்கம்!ஜூலையிலேயே சதி! கட்டடம் அல்லது விமானத்தின் மீது மோத திட்டம்! ப்ளைதுபை துணை விமானி வாக்குமூலம்பிளேக் தொற்றுக்கு பலியான ரஷிய ஆய்வாளர்! ஆய்வக குழாய் வெடித்து பரவியதா? அதிர்ச்சித் தகவல்பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்!திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு

பிக் பாஸ் 10: லட்சுமி பிரியா, ஷமா முகத்திரையை கிழித்த கரீஷ்மா!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் லட்சுமி பிரியா, ஷமாவின் உண்மையான முகத்தை கரீஷ்மா வெளிக்கொண்டுவந்தது குறித்து...

Bigg boss 10 tamil Karishma tore masks off Lakshmi Priya and Shama

கரீஷ்மா, லட்சுமி பிரியா, ஷமா - எக்ஸ்

Published On :

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் லட்சுமி பிரியா மற்றும் ஷமாவின் உண்மையான முகத்தை தனது திறமையான ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் காமன்மேன் போட்டியாளர் கரீஷ்மா.

வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்துள்ள கரீஷ்மா, தனது முதல் நாள் ஆட்டத்திலேயே பிக் பாஸ் வீட்டிற்குள் சீஸ் டாஸ்க்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், உடன்படிக்கைகளை வெளிப்படுத்தி விவாதத்தை கிளப்பியுள்ளார்.

இதனால் லட்சுமி பிரியா மற்றும் ஷமாவிடம் மற்ற போட்டியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறைமுகமாக உடன்படிக்கை செய்துவிட்டு, பிறகு முதுகில் குத்தும்படி விளையாடுவது நேர்மையான விளையாட்டல்ல என ஷமா, லட்சுமி பிரியாவை பிக் பாஸ் சக போட்டியாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 5வது வாரத்தை எட்டியுள்ளது. 4 வது வாரத்தின் முடிவில் அஸ்மிதாவுடன் கைகள் கட்டப்பட்டிருந்த சவின்யாவும் தன்யாவுடன் கைகள் கட்டப்பட்டிருந்த ஜாவேத்தும் வெளியேற்றப்பட்டனர்.

லட்சுமி பிரியாவுடன் கைகள் கட்டப்பட்டிருந்த குமரன், தாமாகவே போட்டியில் இருந்து விலகி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதனால் லட்சுமி பிரியா காப்பாற்றப்பட்டு பிக் பாஸ் போட்டியில் தொடர்கிறார்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் 3 பேர் இந்த வாரம் நுழைந்துள்ளனர். பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன், சின்ன திரை நடிகை அக்‌ஷிதா ஆகியோருடன் பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த கரீஷ்மா ஆகியோர் உள்ளே நுழைந்துள்ளனர்.

Bigg boss 10 tamil

Bigg boss 10 tamil

இந்நிலையில், இன்று உணவு மேசையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கும்போது, சீஸ் டாஸ்க் போட்டியில் ஷமாவும் லட்சுமி பிரியாவும் உடன்படிக்கை செய்துகொண்டு மற்ற போட்டியாளர்களை குறி வைத்து விளையாடினர்.

இதற்கிடையே அவினாஷ் உடனும் ஷமா உடன்படிக்கை செய்துகொண்டுள்ளார். இது லட்சுமி பிரியாவுக்கு தெரியாது. லட்சுமி பிரியாவுடன் ஷமா உடன்படிக்கை செய்தது அவினாஷுக்கு தெரியாது. இவ்வாறு மற்ற போட்டியாளர்களின் ஆட்டத்தை கெடுக்கும் வகையில் லட்சுமி பிரியாவும் ஷமாவும் விளையாடியுள்ளதாக சக போட்டியாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Summary

Bigg boss 10 tamil Karishma tore masks off Lakshmi Priya and Shama

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.