தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 96.26 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 473 புள்ளிகளுடனும், நிஃப்டி 134 புள்ளிகளுடன் நிறைவு!!உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!

பதற்றத்தில் பிக் பாஸ் வீடு! செருப்பு வைப்பதற்கு ஜேசன் - வாசன் இடையே கடும் மோதல்!

டிடிஎஃப் வாசன் - ஜேசன் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து...

Bigg boss 10 tamil update  Jason and TTF Vasan over pair of slipper

மோதலாக மாறிய வாக்குவாதத்தில் டிடிஎஃப் வாசன் - ஜேசன் - படம் - ஹாட் ஸ்டார்

Published On :

வைல்டு கார்டு போட்டியாளரான டிடிஎஃப் வாசன் மற்றும் ஜேசனின் வாக்குவாதத்தால் பிக் பாஸ் வீடு பரபரப்பான சூழலை எட்டியுள்ளது.

வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு,வாசன் மற்றும் ஜேசன் இடையே கடுமையான வாக்குவாதமாக மாறியது. வாசனை அடிக்கும் தொனியில் ஜேசன் முன்னேறியதால், சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்து இருவரையும் சமாதனம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 5வது வாரத்தை எட்டியுள்ளது. 4 வது வாரத்தின் முடிவில் அஸ்மிதாவுடன் கைகள் கட்டப்பட்டிருந்த சவின்யாவும் தன்யாவுடன் கைகள் கட்டப்பட்டிருந்த ஜாவேத்தும் வெளியேற்றப்பட்டனர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் 3 பேர் இந்த வாரம் நுழைந்துள்ளனர். பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன், சின்ன திரை நடிகை அக்‌ஷிதா ஆகியோருடன் பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த கரீஷ்மா ஆகியோர் உள்ளே நுழைந்துள்ளனர்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் படுக்கை அருகே காலணிகள் வைப்பதில் ஜேசன் - வாசன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி ஆவேசமாக முன்னேறினர். சூழ்நிலை கைமீறிச் செல்வதை உணர்ந்த மற்ற போட்டியாளர்கள் உடனடியாக இருவருக்கும் இடையில் வந்து, அவர்களை சமாதானப்படுத்தி பிரிக்க முயன்றனர். இதனால் வாக்குவாதம் மேலும் தீவிரமடையாமல் தடுக்கப்பட்டது.

பதற்றம் அதிகரித்து, வீடு முழுவதும் பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், பிக் பாஸ் வீட்டில் ஒரு சிறிய கருத்து வேறுபாடு கூட எவ்வாறு பெரிய மோதலாக மாறக்கூடும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் வெளிப்படுத்தியது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை தினமும் இரவு 9:30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் காணலாம். ஜியோ ஹாட்ஸ்டாரில் பிக் பாஸ் வீட்டின் 24x7 நேரலை ஒளிபரப்பையும் காணலாம்.

Summary

Tension in the Bigg Boss house A fierce clash breaks out between Jason and TTF Vasan over pair of slipper

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.