அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!தில்லி ஜந்தர் மந்தர் இனி போராட்டம் நடத்தும் இடமில்லை! உள்துறை அமைச்சகம்! தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

ஜேசனுக்கு என் மீது பொறாமை! தன்யாவிடம் வெளிப்படையாகப் பேசிய டிடிஎஃப் வாசன்!

ஜேசன் குறித்து நடிகை தன்யா - கரீஷ்மாவிடம் டிடிஎஃப் வாசன் பேசியது தொடர்பாக...

 Jason is jealous of me TTF Vasan

டிடிஎஃப் வாசன் / தன்யா - எக்ஸ்

Published On :

ஜேசன் ஒரு முழுமையான பிக் பாஸ் போட்டியாளர் என்றும், எதற்குமே தயாராகாமல் வந்த தன்னைக் கண்டால் அவருக்கு பொறாமை வருவது இயல்பு எனவும் டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார்.

ஜேசன் குறித்து நடிகை தன்யாவிடமும் பிக் பாஸ் காமன்மேன் போட்டியாளர் கரீஷ்மாவிடமும் பேசும்போது வாசன் இவ்வாறு பேசியுள்ளார்.

இது தொடர்பாக டிடிஎஃப் வாசன் பேசியதாவது:

''ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் என அனைத்து மொழி பிக் பாஸ் நிகழ்ச்சிகளையும் பார்த்து முழு பிக் பாஸ் போட்டியாளராகத் தயாராகி வந்தவர் ஜேசன். 6 ஆண்டுகளாக இதற்காக அவர் தயாராகியுள்ளார். ஒரு முழுமையான பிக் பாஸ் நபர் அவர்.

எதற்குமே தயாராகாமல் இந்த இடத்துக்கு வந்த என்னைக் கண்டால் பொறாமை வருமா? வராதா? நமக்குதான் தெரியும் நாம் எதையுமே சீரியஸாக எடுத்துக்கொள்ளும் ஆள் இல்லை என்று. தெரியாத விஷயங்களை கூச்சப்படாமல் கேட்டு தெரிந்துகொள்வது நம் இயல்பு'' என கரீஷ்மாவிடமும் தன்யாவிடமும் பேசியுள்ளார்.

டிடிஎஃப் வாசன் பல இடங்களில் தடுமாறும்போதும் பலரின் விமர்சனங்களை எதிர்கொள்ளும்போதும், அவருக்கு துணையாக வந்து நிற்பவராக ஜேசன் இருக்கிறார். இதனிடையே ஜேசன் குறித்து டிடிஎஃப் வாசன் பேசியுள்ளது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக டிடிஎஃப் வாசன், நடிகை அக்‌ஷிதா மற்றும் பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சி போட்டியாளர் கரீஷ்மா ஆகியோர் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Bigg boss 10 tamil Jason is jealous of me TTF Vasan speaks openly to Dhanya kareeshma

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.