பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!மதுவுக்கு கூடுதல் கட்டணம்: விசாரணை நடத்தாமல் பணிநீக்கம் கூடாது - உயர் நீதிமன்றம்டெல்லி கேப்பிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளராக கங்குலி நியமனம்!இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது! ராகுல், பிரியங்கா தொடர்ந்து பேரணி!தேர்தல் ஆணையம் நோக்கி சென்ற எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்! சாலையில் அமர்ந்து தர்னா!கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகல்!

கார் வாங்கியதைக் கொண்டாடிய சின்ன மருமகள்!

முதல்முறையாக தனக்கென ஒரு பொருளை தன்னுடைய உழைப்பில் வாங்கியுள்ளதை நடிகை ஸ்வேதா கொண்டாடியுள்ளது குறித்து....

Vijay TVs Chinna marumagal serial actress Swetha

நடிகை ஸ்வேதா - இன்ஸ்டாகிராம்

Published On :

முதல்முறையாக தனக்கென ஒரு பொருளை முழுக்க முழுக்க தன்னுடைய உழைப்பில் வாங்கியுள்ளதாக சின்ன மருமகள் தொடரின் நாயகி ஸ்வேதா தெரிவித்துள்ளார்.

புதிதாக கார் வாங்கியுள்ள ஸ்வேதா, பல மாதங்களாக கண்ட கனவு, இன்று நனவாகியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் 2024 ஜனவரி முதல் சின்ன மருமகள் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் இத்தொடரி, நடிகை ஸ்வேதா நாயகியாக நடிக்கிறார்.

ஸ்வேதாவுக்கு ஜோடியாக நவீன்குமார் நாயகனாக நடித்து வருகின்றனர். இவர்களுடன் வி.ஆர். திலகம், பானுமதி, சங்கவி ராஜேந்திரன், ஸ்வேதா சுப்பிரமணியம் உள்ளிட்ட பலரின் நடிப்பும் இத்தொடருக்கு பலமாக அமைந்துள்ளது.

கிராமத்தில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி, குடும்ப சூழல் காரணமாக பழமைவாத பணக்கார குடும்பத்தில் திருமணம் செய்துகொண்டு சென்ற பிறகு அவர் சந்திக்கும் சவால்களை மையமாக வைத்து சின்ன மருமகள் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

Story image

பள்ளிப் பருவ மாணவியாகவும், திருமணமான இளம் பெண்ணாகவும் சிறப்பான நடிப்பை ஸ்வேதா வழங்கி வருவதால், இத்தொடரில் ஏராளமான ரசிகர்கள் இவருக்குக் குவிந்துள்ளனர். இத்தொடரில் நடித்துவருவதற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் இவர் வென்றுள்ளார்.

இதுமட்டுமின்றி சமூகவலைதளப் பக்கத்திலும் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர் என்பதால், அடிக்கடி தனது ரசிகர்களுக்காக நேரலையில் உரையாடுவது வழக்கம். தற்போதுபுதிதாக கார் வாங்கியுள்ளதை தனது ரசிகர்களுடன் ஸ்வேதா பகிர்ந்துள்ளார்.

நடிகை ஸ்வேதா

நடிகை ஸ்வேதா

கார் வாங்கிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள ஸ்வேதா, இறுதியாக என்னுடையது வந்துவிட்டது. 2026 ஆம் ஆண்டின் முதல் ஆசையாக எனக்காக ஒரு கார் வாங்க வேண்டும் என்பதுதான். வசதியாக மிகவும் விரும்பிச் செல்லும் பயணத்தைக் கொடுக்கக் கூடிய கார் வாங்க வேண்டும்.

ஆசைப்படுவதோடு மட்டும் இருந்துவிடாமல், அதற்காக கடினமாக உழைத்தால் ஆசைகள் நிறைவேறும். பல மாதங்களாக இதற்காக நான் உழைத்து வந்தேன். இன்று, இறுதியாக எனக்காக ஒரு காரை வாங்கியுள்ளேன். அதுவும் என்னுடைய சொந்த உழைப்பில் சாத்தியமாக்கியுள்ளேன். தயவு செய்து கண்ணு வைக்காதீர்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் ஸ்வேதாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Summary

Vijay TVs Chinna marumagal serial actress Swetha celebrated buying a car

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.