எங்கள் ஜோடி ஹிட் ஆகும் என நினைக்கவில்லை: நடிகை ஜீவிதா
சந்தோஷும் ஜீவிதாவும் ஏற்கெனவே ரஞ்சனி தொடரில் இணைந்து நடித்திருந்தனர்.
ரஞ்சனி தொடரில் ஜீவிதா, சந்தோஷ் - படம் | இன்ஸ்டாகிராம்
இரு மலர்கள் தொடரில் எங்கள் ஜோடி பலரின் மனதைக் கவரும் வகையில் இருக்கும் என நினைக்கவில்லை என்று சின்ன திரை நடிகை ஜீவிதா தெரிவித்துள்ளார்.
ரஞ்சனி தொடரைத் தொடர்ந்து நாங்கள் இருவரும் இரு மலர்கள் தொடரிலும் ஜோடியாக நடிப்பதால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்று இருந்த சந்தேகம் இதன்மூலம் தீர்ந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு இருமலர்கள் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகை ஹிமா பிந்து, ஜீவிதா ஆகியோர் அக்கா - தங்கையாக முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நாயகனாக ரஞ்சனி தொடரின் நடிகர் சந்தோஷ் நடித்து வருகிறார்.
இரு மலர்கள் தொடரில் சந்தோஷுக்கு ஜோடியாக ஹிமா பிந்து நடித்து வந்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில், குடும்ப சூழல் காரணமாக தங்கை ஜீவிதாவை திருமணம் செய்துகொள்ள வேண்டிய சூழல் உருவாகும். தற்போது எதிர்பாராத திருப்பமாக சந்தோஷ் - ஜீவிதாவுக்கு திருமணம் நடந்துள்ளது.
கணவன் - மனைவியாக இருவருக்கு இடையிலான காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், எதிர்பாராத இந்த திருப்பம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுமா? என்ற சந்தேகம் இருந்ததாகவும் ஆனால், மக்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்து ஏற்றுக்கொண்டதாகவும் நடிகை ஜீவிதா தெரிவித்துள்ளார்.
ஏனெனில் சந்தோஷ் - ஹிமா பிந்து இடையிலான காதல் காட்சிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது திருப்பம் என்ற பெயரில் ஜோடியை மாற்றுவதை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ற சந்தேகம் எப்போதுமே இருந்ததாகவும், தற்போது அந்த சந்தேகம் தீர்ந்துள்ளதாகவும் ஜீவிதா குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில் சந்தோஷும் ஜீவிதாவும் ஏற்கெனவே ரஞ்சனி தொடரில் இணைந்து நடித்திருந்தனர். அத்தொடரில் இருவரையும் காதலர்களாக ரசிகர்கள் பார்த்துள்ளனர். தற்போது கணவன் - மனைவியாக இவர்களைப் பார்ப்பது அத்தொடரின் நீட்சி போன்ற உணர்வை ஏற்படுத்தலாம் என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Summary
I didn't think our pairing would be a hit: Actress Jeevitha
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


