
7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீரியலில் நடிக்கும் சின்ன திரை நடிகை!
7 ஆண்டுகளுக்குப் பிறகு அபிராமி என்ற தொடரில் காவ்யா நடிப்பது குறித்து...

நடிகை காவ்யா - இன்ஸ்டாகிராம்
7 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை காவ்யா சாஸ்த்ரி மீண்டும் தமிழில் புதிய தொடரில் நடித்து வருகிறார். தமிழில் புதிதாக ஒளிபரப்பாகிவரும் அபிராமி என்ற தொடரில் காவ்யா நாயகியாக நடித்து வருகிறார்.
இது தொடர்பாக விடியோ வெளியிட்டுள்ள நடிகை காவ்யா,
''தமிழ் நேயர்களுக்கு மகாலட்சுமியாக என்னைத் தெரியும். மகாலட்சுமி தொடர் முடிந்து 7 ஆண்டுகள் ஆகின்றன. 900 நாள்கள் அத்தொடர் ஒளிபரப்பானது. தமிழ் மக்களிடம் இருந்து மகாலட்சுமி தொடருக்கு அதிக அன்பு கிடைத்தது.
இப்போது 7 ஆண்டுகள் கழித்து அபிராமியாக உங்கள் முன்பு வரப்போகிறேன். மகாலட்சுமியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது அபிராமி பாத்திரம். இதுவும் மதிய நேரத்தில்தான் ஒளிபரப்பாகிறது. வீட்டுப் பெண்களுக்கு மிகவும் பிடித்த நேரத்தில் ஒளிபரப்பாவதால், அவர்களை நிச்சயம் கவரும்.
தமிழ் சேனல் என்றாலே மிகவும் மகிழ்ச்சிதான். மறுபடியும் தமிழ் சேனலில் என்னுடைய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தெரிந்த களம் என்பதால், தெரிந்த ரசிகர்கள் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் அபிராமி தொடரில் நடிக்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் பிற்பகல் 1.30 மணிக்கு அபிராமி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. குடும்ப உறுப்பினர்களுக்காக தனது கனவுகளை மறந்து வீட்டு வேலைகளில் வாழ்வைத் தொலைத்த பெண்ணின் கதையாக அபிராமி தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிகை காவ்யா தமிழில் நாயகியாக நடிப்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Summary
serial actress returns to acting in tamil serials after 7 years abirami serial telecast
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







