
மமிதா பைஜுவுடன் சின்ன திரை நடிகர் குரேஷி!
நடிகை மமிதா பைஜு - குரேஷி சந்திப்புக்கான காரணம் குறித்து...

நடிகை மமிதா பைஜு உடன் நடிகர் குரேஷி - இன்ஸ்டாகிராம்
தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் இளம் நடிகையான மமிதா பைஜுவை சின்ன திரை நடிகர் குரேஷி சந்தித்துள்ளார். அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் ரசிகர்களுடன் குரேஷி பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து மலையாளத்தைத் தொடர்ந்து தமிழிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை மமிதா பைஜு.
பிரதீப் ரங்கநாதனுடன் டியூட், சூர்யாவுடன் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ், விஜய்யுடன் ஜனநாயகன் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை மமிதா பைஜு கொடுத்துவருகிறார்.
தமிழிலும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இதனிடையே தமிழ் சின்ன திரை நடிகர் குரேஷி, மமிதா பைஜுவை சந்தித்துள்ளார்.

நடிகை மமிதா பைஜு உடன் நடிகர் குரேஷி - இன்ஸ்டாகிராம்
விளம்பரப் படத்துக்காக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதற்கான முன்னோட்டம் நடைபெற்ற நிலையில், அதில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகர் குரேஷி பகிர்ந்துள்ளார்.
மமிதா உடனான புகைப்படங்களைப் பகிர்ந்து, குரேஷி பதிவிட்டுள்ளதாவது: ஆம், திறமைகளின் ஒட்டுமொத்த உருவத்துடன் இருக்கிறேன். எனக்கு மிகவும் விருப்பமான நடிகை மமிதா பைஜு உடனான இனிய நினைவுகள் எனப் பதிவிட்டுள்ளார்.
நடிகர் குரேஷியின் வளர்ச்சிக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Summary
cook with comali fame Mohamed Kuraishi meets jana nayagan actress Mamitha Baiju
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







