ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைவுகாந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

கயல் தொடருக்கு மாற்றாக ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடர் இதுதான்!

பராசக்தி தொடரின் ஒளிபரப்பு தேதி குறித்து...

Pavan Ravindra - Debjani Modak

பவன் - தேப்ஜானி - கோப்புப்படம்

Published On :

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கு மாற்றாக ஒளிபரப்பாகும் புதிய தொடர் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் கயல் தொடர் வரும் அக். 24 ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

கயல் தொடருக்கு மாற்றாக அக். 26 ஆம் தேதி முதல் புதிய தொடரான பராசக்தி சீரியல் ஒளிபரப்பு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிஸ்டர் மனைவி தொடரில் இணைந்து நடித்த பவன் - தேப்ஜானி ஜோடி பராசக்தி தொடரில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இந்தத் தொடரை விஷன் டைம் நிறுவனம் தயாரிக்கிறது.

மிஸ்டர் மனைவி தொடரில் பவன் - தேப்ஜானி ஆகியோர் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்கள். இதனைத் தொடர்ந்து, இவர்கள் தொலைக்காட்சி விளம்பரத்தில்கூட ஜோடியாக நடித்திருந்தனர்.

இந்த நிலையில், பராசக்தி தொடரில் இவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும், இந்தத் தொடரில் நடிகர் ரமேஷ் கண்ணா, குறிஞ்சி, ராஜா, அஜய் ரத்னம் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நடிகர் பவன் ரவீந்திரா ஜீ தெலுங்கில் தீர்க்க சுமங்களி பவா என்ற தொடரில் நடித்து வருகிறார். நடிகை தேப்ஜானி மொடாக் ராசாத்தி தொடரின் மூலம் தமிழ் சின்ன திரையில் அறிமுகமானார். தொடர்ந்து வானத்தைப் போல, மிஸ்டர் மனைவில் தொடரில் நடித்து கவனம் ஈர்த்தார்.

Summary

As the serial Kayal, currently airing on Sun TV, is set to conclude soon, information regarding the show that will replace it has come to light.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.