கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!நேபாள வெள்ளம்! பலி 1,290 ஆக உயர்வு; 10-வது நாள்களாக மீட்புப் பணிகள் தீவிரம்!நேபாள வெள்ளம்! 9 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!ஜிஎஸ்எல்வி-எஃப் 17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புகுடியரசு துணைத் தலைவா் நாளை சென்னை வருகைஉக்ரைன் போரில் அமைதி உடன்பாடு எட்ட வாய்ப்பு: ரஷிய அதிபா்

புதிய தொடரில் இணைந்த அய்யனார் துணை தொடர் நடிகை!

அய்யனார் துணை தொடர் நடிகை தீப்தி புதிய தொடரில் இணைந்தது குறித்து...

dheepthi

நடிகை தீப்தி கபில் - படம்: இன்ஸ்டாகிராம்

Published On :4 செப்டம்பர் 2026, 1:40 pm IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை தொடரில் நடித்து வரும் நடிகை தீப்தி கபில், சுட்டும் விழி சுடரே தொடரில் இணைந்துள்ளார்.

பாரதி கண்ணம்மா தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமான நடிகை வினுஷா தேவி. இவர், சுட்டும் விழி சுடரே என்ற தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.

வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிக்கும் இந்தத் தொடரில் நாயகனாக நடிகர் யுவன் மயில்சாமி நடிக்கிறார். வினுஷா தேவியின் மகளாக பேபி தன்ஷிகா குழந்தை நட்சத்திரமாக நடிக்கிறார்.

சிறையில் இருந்து பெண் குழந்தையை வளர்க்க, வினுஷா எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், தொடரின் விறுவிறுப்பைக் கூட்டுவதற்காக புதிய பாத்திரத்தை சுட்டும் விழி சுடரே தொடர் குழு அறிமுகம் செய்துள்ளது.

சுட்டும் விழி சுடரே தொடரில், சந்தியா பாத்திரத்தில் நடிகை தீப்தி கபில் நடிக்கிறார். இந்தத் தொடரில் நடிகை தீப்தி இணைந்துள்ளதால், தொடரின் கதைக்களத்தில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சின்ன திரையில் தொகுப்பாளினியாக தனது பயணத்தைத் தொடங்கி, அடுத்தடுத்து சின்ன திரை தொடர்களில் நடித்து வருபவர் நடிகை தீப்தி கபில்.

ஜீ தமிழில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பான செம்பருத்தி தொடரிலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலா தொடரிலும் இவர் நடித்திருந்தார். தற்போது அய்யனார் துணை தொடரில் நடித்து வருகிறார்.

சுட்டும் விழி சுடரே தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Actress Deepthi, known for her role in the Vijay TV series Ayyanar thunai, has joined the serial Sutrum Vizhi Sudare.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.