
மகாபாரதம் தொடரில் நடித்தவர்களின் மேடை நாடக அரங்கேற்றம்! சென்னை ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!
மகாபாரதம் தொடரில் நடித்த நடிகர், நடிகைகள் சென்னையில் மகாபாரதத்தை அரங்கேற்றம் செய்தது குறித்து...

திரெளபதி / மகாபாரத மேடை நாடகம் - இன்ஸ்டாகிராம்
மகாபாரதம் தொடரில் நடித்த நடிகர், நடிகைகள் சென்னையில் மகாபாரத நாடகத்தை அரங்கேற்றம் செய்தனர்.
ஆடல், பாடல் என பிரமாண்டமாய் அரங்கேறிய மகாபாரதத்துக்கு, சென்னை மக்கள் மிகுந்த உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஸ்டார் தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் 2013 ஆம் ஆண்டு மகாபாரதம் தொடர் எடுக்கப்பட்டது. இத்தொடர் மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பானது.
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் 267 நாள்கள் வரை ஒளிபரப்பானது. இத்தொடரில் நடித்த பாத்திரங்களும், காட்சிகளின் பிரமாண்டமும் நெடுந்தொடர் என்பதைத் தாண்டி, மக்கள் மனதில் பதிந்தது.
சித்தார்த் ஆனந்த் குமார், அமர்பிரீத், கமல் மோங்கா, லோக்நாத் பாண்டே, முகேஷ்குமார் சிங் என 5 இயக்குநர்கள் மகாபாரதம் தொடரை இயக்கினர்.
பூஜா ஷர்மா திரெளபதியாகவும், செளரப் ராஜ் ஜெயின் ஸ்ரீ கிருஷ்ணராகவும், ஷாஹிர் ஷேக் அர்ஜுனனாகவும் அஹம் ஷர்மா கர்ணனாகவும் நடித்திருந்தனர்.
இத்தொடரில் பஞ்ச பாண்டவர்கள், கெளரவர்கள் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிகர்கள் கச்சிதமாகப் பொருந்தியிருந்தனர். இதனாலேயே மகாபாரதம் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதுமட்டுமின்றி இத்தொடரில் நடித்தவர்களே மேடையிலும் மகாபாரதத்தை அரங்கேற்றி வருகின்றனர். குஜராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் மகாபாரதம் நாடகத்தை அரங்கேற்றிய இவர்கள், சமீபத்தில் சென்னையிலும் அரங்கேற்றம் செய்தனர்.

மகாபாரத மேடை நாடகம் அரங்கேற்றம் - இன்ஸ்டாகிராம்
2013 ஆம் ஆண்டு மகாபாரதம் தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. மிகுந்த பொருள்செலவில் எடுக்கப்பட்ட இத்தொடர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில், 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே தொடரை அரங்கேற்றம் செய்துள்ளனர்.
இதனால் மகாபாரத ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு நாடகத்தை நேரில் கண்டு, நடிகர், நடிகைகளை உற்சாகப்படுத்தினர். நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய துரியோதனன், தமிழில் பேசி அசத்தினார்.
Summary
Stage performance by the cast of the Mahabharata serial Enthusiastic welcome from Chennai fans
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







