பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

வெளியேறிய பிறகு... பிக் பாஸ் மணிவண்ணன் வெளியிட்ட முதல் விடியோ!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் காமன்மேன் பிரதிநிதியாக கலந்துகொண்ட மணிவண்ணன் வெளியிட்டுள்ள விடியோ குறித்து...

Bigg boss 10 tamil fame Manivannan video went viral after eviction

மணிவண்ணன் - எக்ஸ்

Published On :

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து காமன்மேன் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட மணிவண்ணன் வெளியேறிய பிறகு முதல்முறையாக விடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த விடியோவில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்டதன் வேதனை குறித்துப் பேசியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 3 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துக்கான ஆளும் அணியின் தலைவராக அவினாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவராக ராகவ் செயல்பட்டு வருகிறார்.

பிக் பாஸ் வீட்டில் வாரந்தோறும் (எவிக்‌ஷன்) ஒரு நபர், வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவது வழக்கம். அதாவது இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் தொடர்வதற்கு தகுதியற்ற நபர்களின் பட்டியலை உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள்.

அப்பட்டியலில் இருப்பவர்களில் யார் தொடர விருப்பமோ அவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். அதில் அதிக மக்கள் வாக்குகளைப் பெறும் போட்டியாளர் பிக் பாஸ் வீட்டிற்குள் தொடர்வார். குறைந்த வாக்குகளைப் பெற்ற நபர் பிக் பாஸ் வீட்டில் இருந்து அந்த வாரத்தோடு வெளியேற்றப்படுவார்.

அந்தவகையில் கடந்த வாரம் மணிவண்ணன் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதில் வெற்றி பெற்ற பிறகு பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றார். எனினும் 2 வாரங்களிலேயே மணிவண்ணன் வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி தனது வீட்டிற்கு வந்த பிறகு மணிவண்ணன் விடியே வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியுள்ளதாவது:

''என்னைப்போன்ற பொதுமக்களுக்கு வணக்கம். பிக் பாஸ் வீட்டில் இருந்து 2 வாரங்களில் வெளியேறிவிட்டோம் என்பது குத்திக்கொண்டே உள்ளது. வலி மிகுந்த வருத்தமாகவே உள்ளது.

இன்னும் கொஞ்சம் திறமையை வெளிக்காட்டியிருக்கலாமோ? விளையாடியிருக்கலாமோ? பலருடன் இன்னும் இணைந்து பொழுதுபோக்கு அம்சங்களை சேர்த்திருக்கலாமோ? என்று தோன்றுகிறது. எல்லாமே விதி. நன்றி மக்களே '' என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்தவித வஞ்சனையும் இல்லாமல், அனைவரின் மீதும் பாசாங்கற்ற அன்பு செலுத்தியவர்களில் மணிவண்ணனும் ஒருவர் என ரசிகர்கள் பலர் அந்த விடியோவில் வாழ்த்து கூறி பாராட்டி வருகின்றனர்.

Summary

Bigg boss 10 tamil fame Manivannan video went viral after eviction

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.