
பிக் பாஸ் 10: ஹனிமூன் பீரியட் முடிந்தது! மீண்டும் சர்ச்சையாகும் விஜய் சேதுபதி பேச்சு!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது மீண்டும் சர்ச்சையானது குறித்து...

விஜய் சேதுபதி - எக்ஸ்
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசியது மீண்டும் சர்ச்சையையாகியுள்ளது. பிக் பாஸ் போட்டியாளர்களின் விளையாட்டு குறித்துப் பேசிய விஜய் சேதுபதி, ஹனிமூன் பீரியட் முடிந்தது; இனியும் ஏமாற்றிக்கொண்டு இருக்க முடியாது எனக் குறிப்பிட்டார்.
தவெகவை குறிப்பிடும் விதமாக இவ்வாறு பேசியுள்ளதாக விஜய் ரசிகர்கள் சிலர் இந்த விடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 3 வது வாரத்தை எட்டியுள்ளது. அரசியல் சட்டப்பேரவையை பிரதிபலிக்கும் விதமாக பிக் பாஸ் வீட்டில் விதிகள் வகுக்கப்பட்டுள்லன. இந்த வாரத்துக்கான ஆளும் அணி தலைவராக ஜேசன், அவினாஷ், ஷமா, வினோத் பாபு உள்ளிட்டோர் போட்டியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், வார இறுதி நாளான நேற்று, கடந்த வாரத்தில் நடந்த பிரச்னைகள் குறித்து போட்டியாளர்களுடன் நடிகர் விஜய் சேதுபதி கலந்துரையாடினார்.
அப்போது கடந்த வாரத்தில் ஆளும் அணி தலைவியாக இருந்த ஷமாவின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு, அவரை ராஜிநாமா செய்ய வைத்தது குறித்து சக போட்டியாளர்களிடம் கடுமையாக விவாதித்தார்.
பின்னர், புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட முகேஷின் தலைமை குறித்தும் போட்டியாளர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். இரு தலைமை குறித்தும் விவாதித்துவிட்டு பிறகு பேசிய விஜய் சேதுபதி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 2 வாரங்கள் கடந்துவிட்டதாகவும், இனியும் போட்டியை புரிந்துகொள்ள முடியவில்லை எனக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல எனக் குறிப்பிட்டார்.
உங்களுக்கான ஹனிமூன் பீடியட் முடிந்துவிட்டது. அது ஒரு குறிப்பிட்ட நாள்கள்தான். அதனை அப்படியே வைத்துக்கொண்டு ஓட்ட முடியாது. மற்ற எல்லாரிடமும் இந்த குறை இருக்கும். கொஞ்சம் கவனமாக இருங்கள் என விஜய் சேதுபதி பேசினார்.
போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதி பேசியதை, முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியைக் குறிப்பிட்டுப் பேசியதாக கருதிக்கொண்டு சிலர் இந்த விடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கு முன்பு தலைமைப் பண்பு குறித்து இதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பேசியதையும் விஜய்க்கு எதிராகப் பேசியதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், விஜய் தொலைக்காட்சி நிர்வாகவும், தனிப்பட்ட முறையில் விஜய் சேதுபதியும் அதற்கு விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சியில் நான் பேசும் யாவும் போட்டியாளர்களுக்கானது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்களை மேம்படுத்துவதற்கானது என விஜய் சேதுபதி விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
bigg boss 10 tamil vijay sethupathi speech makes controversy again about tvk vijay
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








