
விஜய் சேதுபதி திமுகவைச் சேர்ந்தவர்: இயக்குநர் மோகன் ஜி விமர்சனம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் பேச்சு குறித்து இயக்குநர் மோகன் ஜி கருத்து...

இயக்குநர் மோகன் ஜி / விஜய் சேதுபதி - எக்ஸ்
நடிகர் விஜய் சேதுபதி திமுகவைச் சேர்ந்தவர் என திரைப்பட இயக்குநர் மோகன் ஜி இன்று (செப். 16) தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தலைமைப் பண்பு குறித்து, போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் விஜய் சேதுபதி பேசியிருந்தது முதல்வர் விஜய்யை சுட்டிக்காட்டும் வகையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளைப் பதிவிட்டுவரும் நிலையில், மோஜன் ஜி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வேலூரில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் மோகன் ஜி பேசியதாவது:
''ஒரு நிகழ்ச்சியை வைரலாக்க வேண்டும் என்பதற்காக முதல்வரை பயன்படுத்திக்கொள்வது தவறு.
கடந்த அரசு நடத்திய விழாவில் கலந்துகொண்டு அவர்களை விஜய் சேதுபதி வெகுவாகப் பாராட்டியிருந்தார். அதற்கு முன்பு அதிமுக நடத்திய நிகழ்ச்சியை விமர்சித்திருந்தார்.
தற்போது தவெக ஆட்சியை விமர்சிக்கிறார். இதன்மூலம் அவர் திமுகவைச் சேர்ந்தவர் என்று மக்கள் மத்தியில் வெளிப்படையாகத் தெரிகிறது.
அஜித் குமாரின் கார் பந்தயத்துக்கு முதல்வர் விஜய் சென்றது நல்ல விஷயம்தான். அஜித் ரசிகர்கள் பக்குவப்பட்டு குடும்பத்தை கவனித்து வருகின்றனர். அவர் படம் வரும்போது மட்டும்தான் ரசிகர்கள் வெளியே தெரிவார்கள்.
மோட்டார் பந்தயத்தை அனைத்து இளம் தலைமுறையினரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக அஜித் குமாரின் அழைப்பை ஏற்று முதல்வர் விஜய் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இருவரும் சேர்ந்து புகைப்படம் கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இதற்காக முதல்வரை விமர்சிப்பவர்கள் அவரின் ரசிகர்களாக இருக்க முடியாது. வேறு கட்சிப் போர்வையில் இருக்கும் நபர்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்'' எனப் பேசினார்.
Summary
Vijay Sethupathi belongs to the DMK: Director Mohan G's criticism
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








