தொழில் துறை அமைச்சரின்றி முதல்வர் விஜய் லண்டன் பயணம்: நயினார் நாகேந்திரன் கேள்வி!தொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

நாற்காலி, அதிகார போதை, ஏமாற்று வேலை: வைரலாகும் விஜய் சேதுபதியின் பேச்சு!

பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது தொடர்பாக...

vijay sethupathi

நடிகர் விஜய் சேதுபதி - படம்: எக்ஸ்

Published On :

பிக் பாஸ் 10 நிகழ்ச்சியில் நாற்காலி, அதிகார போதை, தலைமைப் பண்பு தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளது இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப். 6 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விஜய் சேதுபதியே இந்த புதிய சீசனையும் தொகுத்து வழங்குகிறார்.

இந்த சீசனில் நேர்காணலில் தேர்வான போட்டியாளர்கள் நேரடியாக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

மாறாக, மூன்று போட்டியாளர்கள் அழைக்கப்பட்டு, மேடையில் நிற்கவைக்கப்பட்டு அவர்கள் மூவருக்கும் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் இருவர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

குறைந்த வாக்குகளைப் பெற்ற 8 நபர் மேடையில் இருந்தவாறே வெளியேற்றப்பட்டனர். 19 பேர் போட்டியாளர்களாக உள்ளே அனுப்பப்பட்டனர்.

லஷ்மி பிரியா, சாதிகா, பிருத்வி, ஜாவித், அஸ்மிதா, முத்தழகி, அவினாஷ், ஷாமா, ஜேசன், முனியம்மாள், பிளாக் பாண்டி, வினோத் பாபு, சாந்தினி தமிழரசன், ஸ்வானிகா, குமரன் தங்கராஜன், ராகவ், தன்யா, முகேஷ், அடாவடி அன்சார் ஆகிய 19 போட்டியாளர்கள் தேர்வாகினர். சென்ற வார தலைவராக நடிகை ஷாதிகா தேர்வு செய்யப்பட்டார்.

இதனிடையே, சமையல் அணியில் இருந்த நடிகர் பிளாக் பாண்டிக்கு, திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

தலைவராகத் தேர்வான ஷாதிகா, தனக்கான ஆளும் அணியைத் தேர்வு செய்தார். அதில் லஷ்மி பிரியா, குமரன், ராகவ், முனியம்மா, அடாவடி அன்சர், முகேஷ், முத்தழகி, அவினாஷ் உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

எஞ்சிய போட்டியாளர்கள் எதிர் அணியினராக தேர்வு செய்து வினோத் பாபு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். எதிர் அணியில் ஜேசன், ஷாமா, சாந்தினி உள்ளிட்டோர் இருந்தனர்.

ஜனநாயக அறையில் ஆளும் அணியினர் ஒருபுறமும், எதிர் அணியினர் மறுபுறமும் அமர்ந்து, வீட்டின் பிரச்னைகள் குறித்து விவாதம் செய்தனர்.

நேற்றைய நிகழ்ச்சியில் ஷாதிகா தலைவர் பதவி குறித்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “தலைவர் என்றால் என்னவென்று தெரியாமல், தலைமையின் பொறுப்பை உணராமல், வாக்குறுதிகளை அள்ளிகொடுத்துவிட்டு, பிரச்னைகள் வரும்போது, எதிரணி மீது பழிபோட்டு ஓடுவது, தலைமைப் பண்புக்கான தகுதி கிடையாது. அது ஏமாற்று வேலை.

நாற்காலி என்பது எல்லார் வீட்டிலேயும் இருக்கும், அது கிடைக்கும்போது அதிகாரம் வரும், அதுதான் போதை” என்றார்.

அதேபோல போட்டியாளர் முனியம்மாளிடன் விஜய் சேதுபதி, ”எதிரணிதான் வெளி நடப்பு செய்ய வேண்டும், ஆளுங்கட்சி வெளிநடப்பு செய்யக் கூடாது. நீங்கள் சட்டப்பேரவையை பார்த்த்தே இல்லையா? என்று கேட்டார்.

நடிகர் விஜய் சேதுபதி யாரைக் குறிப்பிட்டு இவற்றையெல்லாம் பேசியுள்ளார் என்று இணையத்தில் அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

இதற்கு விஜய் சேதுபதி அடுத்த வார எபிசோடில் பதிலளிப்பாரா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Summary

Actor Vijay Sethupathi's remarks regarding the chair, the intoxication of power, and leadership qualities on the Bigg Boss 10 show are drawing criticism online.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER