
என்னைப்போல் பேசுவீர்களா? விஜய் சேதுபதியின் கோரிக்கையை ஏற்று அசத்திய அன்சர்!
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதியைப் போன்று நடிகர் அன்சர் பேசியது குறித்து...

அடாவடி அன்சர் / விஜய் சேதுபதி - எக்ஸ்
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதியைப் போன்று நடிகர் அடாவடி அன்சர் பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
''என்னைப்போல் பிக் பாஸ் வீட்டில் பேசுவீர்களாமே? யாரது'' எனக் கேட்டு தன்னைப்போல் பேசுமாறு கேட்டது, அன்சர் பேசி அசத்தியது பலரைக் கவர்ந்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி, 2 வாரங்களை நிறைவு செய்துள்ளது. இந்த வாரத்துக்கான ஆளும் அணி தலைவியாக ஷமா தேர்வான நிலையில், அவரின் ஆட்சி இடையில் கவிழ்க்கப்பட்டது. பின்னர் முகேஷ் தலைவராகத் தேர்வானார்.
வார இறுதி நாள்களில் போட்டியாளர்களிடம் நடிகர் விஜய் சேதுபதி உரையாடுவார். அந்தவகையில் இந்த வாரம் சனிக்கிழமை போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதி கலந்துரையாடினார்.
கடந்த வாரத்தில் வீட்டில் நடந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஷமாவின் தலைமைப் பண்பு குறித்தும் தலைமையின் கீழ் போட்டியாளர்கள் சந்தித்த பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, நடிகர் விஜய் சேதுபதி, தன்னைப்போன்று பேசுபவர் பிக் பாஸ் வீட்டில் இருப்பதாகக் கேட்டார். அதற்கு எழுந்து நின்ற அடாவடி அன்சரிடம் தன்னைப்போன்று பேசுவதை உற்சாகப்படுத்தி பேசிக்காட்டுமாறு கோரினார்.
வெள்ளை நிற கோட்சூட் அணிந்துவந்து நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிக்கொண்டிருந்ததால், அது குறித்து அவரின் குரலில் அன்சர் பேசி அசத்தினார். அவரின் பேச்சு, விஜய் சேதுபதியை வெகுவாகக் கவர்ந்தது.
பிக் பாஸ் போட்டியாளர்களையும் அங்கிருந்த பார்வையாளர்களையும் அன்சர் தனது திறமையால் கவர்ந்தார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
Summary
Bigg boss 10 tamil adavadi ansar mimicry vijay sethupathi voice viral video
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








