
நிகழ்ச்சித் தொகுப்பாளரை மணந்த நடிகர் முகேஷ் கண்ணா!
நிகழ்ச்சித் தொகுப்பாளரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் முகேஷ் கண்ணா...

மனைவி ப்ரீத்தி உடன் நடிகர் முகேஷ் கண்ணா - எக்ஸ்
சின்ன திரை நடிகர் முகேஷ் கண்ணாவுக்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ப்ரீத்திக்கும் நேற்று கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. இதில் சின்ன திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கார்த்திகை தீபம் தொடரில் நடிகர் முகேஷ் கண்ணா நடித்து வருகிறார்.
இத்தொடரில் இவரின் நடிப்பு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது மட்டுமின்றி, ஆக்ஷன் காட்சிகளிலும் நடிப்பதால் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
இதற்கு முன்பு ஜீ தமிழின் மாரி தொடரிலும் முகேஷ் நடித்திருந்தார். இதுமட்டுமின்றி பின்னனி குரல் கலைஞராகவும் இருந்து வருகிறார். இவர் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ப்ரீத்தியை காதலித்துவந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்களின் திருமணத்தில் சின்ன திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
Summary
Actor mukesh kanna married tv host preethi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







