FOLLOW US

ON GOOGLE DISCOVER

மாணவர்கள் போராட்டத்தை பாஜகவினர் குழந்தைகளே ஆதரிப்பார்கள்! ராகுல் காந்தி பேச்சு!மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி சாதாரணமான ஒன்றுதான்! மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில்!பாமக தலைவராக மீண்டும் அன்புமணி தேர்வு! நீட் வினாத்தாள் கசிவு! விரைவு நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய சிபிஐ! சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
/

சிறகடிக்க ஆசை தொடர் நடிகர் காலமானார்!

பிரபல சின்ன திரை நடிகர் ஜெயமணி காலமானார்.

News image

நடிகர் ஜெயமணி - படம்: சினிமா எக்ஸ்பிரஸ்

Updated On :29 ஜூலை 2026, 1:08 pm IST

பிரபல திரைப்பட மற்றும் சின்ன திரை குணச்சித்திர நடிகர் வி.சி. ஜெயமணி மாரடைப்பு காரணமாக காலமானார்.

சிறுவயதில் இருந்தே நடிப்பின்மீது இருந்த ஆர்வத்தால் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய ஜெயமணி, திரைப்படம் மற்றும் தொடர்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானார்.

இவர், திருமதி செல்வம் தொடரில் பூங்காவனம் பாத்திரத்தில் நடித்து, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். மெட்டிஒலி, கல்யாண பரிசு உள்ளிட்ட பல தொடர்களில் நடித்ததோடு இல்லாமல், 40-க்கும் மேற்பட்ட தொடர்களையும் இயக்கியும் உள்ளார்.

முஸ்தபா, லக்கி மேன், சிங்கம் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். 

தற்போது, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், சிறகடிக்க ஆசை தொடரில் 'மலேசியா மாமா' வேடத்தில் இயல்பாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவர், திடீர் மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

நடிகர் வி.சி. ஜெயமணியின் மறைவுக்கு சினிமா, சின்ன திரை பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Summary

Popular film and television character actor V.C. Jayamani passed away due to a heart attack.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.