இதயம் தொடர் பிரபலம் நடிகர் விட்டலுக்கு திருமணம் அண்மையில் நடைபெற்ற நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சின்ன திரை தொடர்களில் நடிக்கும் நடிகர்களின் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை, தங்கள் வீட்டில் நடைபெறும் விசேஷங்களைபோல, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இதயம் தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகர் விட்டல். இவர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தாயம்மாள் குடும்பத்தார் தொடரிலும் நடித்திருந்தார்.
இவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் இவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், சினிமா, சின்ன திரை பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்தினர். குறிப்பாக, இந்நிகழ்வில் கூமாம்பட்டி தங்கபாண்டி, பிக் பாஸ் பிரபலங்கள் ராணவ், எஃப்ஜே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நடிகர் விட்டலுக்கும் அவரது மனைவிக்கும் ரசிகர்கள் பலர், தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Summary
Actor Vittal, known for the serial Idhayam, has gotten married. Photos related to the event are going viral on the internet.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










