சின்ன திரையில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களின் ஆதரவு, டிஆர்பி புள்ளிப் பட்டியல் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த வாரம் சின்ன திரை தொடர்களுக்கான டிஆர்பி புள்ளிப் பட்டியல் வெளியாகியுள்ளது.
இப்பட்டியலில் பெரும்பாலும் பிரைம் டைம் எனப்படும் மாலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகும் தொடர்களே அதிகம் இடம்பெறுகின்றன. அந்தவகையில் இந்தமுறையும் மாலை நேரத் தொடர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
முதல் 5 இடங்களில் சன் தொலைக்காட்சியின் 4 தொடர்கள் இடம்பெற்றுள்ளன. விஜய் தொலைக்காட்சியின் ஒரு தொடர் இடம்பெற்றுள்ளது.
5வது இடத்தில் மருமகள் தொடர் உள்ளது. கேப்ரியல்லா - ராகுல் ரவி முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். 2024 முதல் ஒளிபரப்பாகிவரும் இத்தொடர் 6.91 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுள்ளது. இத்தொடர் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
4வது இடத்தில் சிங்கப் பெண்ணே தொடர் உள்ளது. இயக்குநர் தனுஷ் இயக்கும் இந்தத் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் மணீஷா மகேஷ் நாயகியாகவும் அமல்ஜித், தர்ஷக் கெளடா நாயகர்களாகவும் நடிக்கின்றனர்.
3வது இடத்தில் அய்யனார் துணை தொடர் உள்ளது. எதிர்நீச்சல் புகழ் மதுமிதா நாயகியாகவும், அரவிந்த் சேஜு நாயகனாகவும் நடிக்கின்றனர். இத்தொடர் 7.34 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
2வது இடத்தில் கயல் தொடர் உள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இத்தொடரில் சைத்ரா ரெட்டி நாயகியாகவும் சஞ்சீவ் கார்த்திக் நாயகனாகவும் நடிக்கின்றனர். இத்தொடர் 7.90 புள்ளிகளைப் பெற்றுள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 7:30 மணிக்கு கயல் தொடர் ஒளிபரப்பாகிறது.
முதலிடத்தில் மூன்று முடிச்சு தொடர் உள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடரில், ஸ்வாதி கொண்டே நாயகியாகவும், நியாஸ் கான் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். பிரீத்தி சஞ்சீவ் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். மூன்று முடிச்சு தொடர் 9.61 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுள்ளது. திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
Summary
Tamil serial TRP list out Moondru Mudichu, kayal, ayyanar thunai placed top places
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூன்று முடிச்சு தொடரில் நடிக்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்!

திருமண வாழ்க்கையில் நுழைந்த இதயம் தொடர் நடிகர்!

மூன்று முடிச்சு தொடரில் இணைந்த நடிகை சஹானா!

மூன்று நாயகர்கள் நடிக்கும் காதல் காதல் காதல் தொடரின் ஒளிபரப்பு தேதி!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai




