எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனுசென்னை புழல் சிறை முதல்வர் விஜய் திடீர் ஆய்வுமாநில அந்தஸ்து! பதவியை ராஜிநாமா செய்யவும் தயார்: புதுவை முதல்வர் என். ரங்கசாமிதிபெத்தில் அணை உடைந்தது! நேபாளத்துக்கு புதிய எச்சரிக்கை! மீட்புப் பணிகள் நிறுத்தம்!

ரன்வீர் சிங்கின் சூழ்ச்சியான முகம் சக்திமான் கதாபாத்திரத்துக்கு உகந்தது அல்ல: முகேஷ் கண்ணா

சக்திமான் படத்தில் ரன்வீர் சிங் நடிக்க வேண்டாமென கூறியதற்கு நடிகர் முகேஷ் கண்ணா விளக்கம் அளித்துள்ளது குறித்து...

Ranveer Singh, Mukesh Khanna

ரன்வீர் சிங், முகேஷ் கண்ணா - படங்கள்: இன்ஸ்டா / ரன்வீர் சிங், முகேஷ் கண்ணா.

Published On :28 ஆகஸ்ட் 2026, 3:55 pm IST

சக்திமான் திரைப்படத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிக்க ஒப்புதல் அளிக்காததுக்கு நடிகர் முகேஷ் கண்ணா, “ ரன்வீர் சிங்கின் சூழ்ச்சியான முகம் சக்திமான் கதாபாத்திரத்துக்கு ஏற்றதல்ல” என விளக்கம் அளித்துள்ளதுள்ளார்.

சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷ்னல் தயாரிப்பில் கடந்த 2022ல் சக்திமான் திரைப்படம் உருவாகுமென அறிவிக்கப்பட்டது. இதில் ரன்வீர் சிங் நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், இந்தக் கதையின் காப்புரிமை வைத்திருந்த முகேஷ் கண்ணா அதனைத் தர மறுத்துவிட்டார்.

சூப்பர்மேன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து முகேஷ் கண்ணா உருவாக்கிய தொலைக்காட்சி சீரியல்தான் சக்திமான். இது 1997- 2005 வரை வெற்றிகரமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டன. சுபஜித் கோஷ் உடனான நேர்காணலில் பங்கேற்ற முகேஷ் கண்ணா பேசியிருப்பதாவது:

ரன்வீர் சிங் துரந்தர், கல்லி பாய் அல்லது கில்ஜியாக நடிக்கலாம். ஆனால், சக்திமானாக நடிக்க முடியாது. அதற்கென நல்ல முகம், நல்ல புகழ் உள்ள ஒருவர் வேண்டும். அது ரன்வீர் சிங்கிற்கு இல்லை. அவருக்கு போக்கிரித்தனமான, சூழ்ச்சி நிறைந்த முகமே இருக்கிறது. சக்திமானின் முகம் மிகவும் நேர்மறையானதாக இருக்கும்.

இந்தப் படத்திற்காக எனக்கு கோடிக்கணக்கான பணத்தை காசோலையாக அளித்தார்கள். லட்சங்களில் அல்ல கோடியில். சந்தேகமே வேண்டாம். நான் வர்த்தக ரீதியில் ஒரு முட்டாள்தான். என்னுடைய அலுவலத்தில் இருப்பவர்களே ‘முதலில் வாங்கிக்கொள்ளுங்கள்; பின்னர் சண்டை போட்டுக்கொள்ளலாம்’ என்றார்கள். பணத்தை விட எனக்கு கொள்கைதான் முக்கியம். சக்திமானின் லெகஸியை நான் பாதுகாக்க வேண்டும்.

முதலில் ஒரு காலோசையை வாங்கினேன். பின்னர் இரண்டாவதை வாங்கவில்லை. என்னைக் கேட்காமல் சக்திமானை உருவாக்கக் கூடாது என படக்குழுவிடம் சொல்லிவிட்டேன். அவர்கள் என்னிடம் பேசினாலும் அவர்கள் வழியில் உருவாக்குவதாகக் கூறினார்கள். எனக்கு அது பிடிக்கவில்லை. சக்திமானை டிஸ்கோவில் நடனமாட வைப்பார்கள். நாளையே வேறு எதுவேண்டுமானாலும் செய்வார்கள் எனக் கூறி நிராகரித்தேன் என்றார்.

Summary

Mukesh Khanna reveals he refused crores for retaining control on Shaktimaan project: 'Ranveer Singh has a scheming face'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.