
கூச்சலிடுவதால் வருவது எனது பலம் அல்ல... டாக்ஸிக் பட கதாபாத்திரத்துக்கு நயன்தாரா பெருமிதம்!
நடிகை நயன்தாரா டாக்ஸிக் படத்தின் கதாபாத்திரம் குறித்து பேசியிருப்பதாவது...

டாக்ஸிக் திரைப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திர போஸ்டர். - படம்: எக்ஸ் / கேவிஎன் புரடக்ஷன்ஸ்.
நடிகை நயன்தாரா டாக்ஸிக் படத்தில் தான் நடித்த கங்கா என்ற கதாபாத்திரம் தனக்கு மிகவும் தொடர்புடையாத இருந்ததாகவும் கூச்சலிடுவதால் வருவது தனது பலம் அல்ல என்றும் நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
கேவிஎன் புரடக்ஷன் தயாரிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் திரைப்படம் கடந்த ஆக.26ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, டாரா சுதாரியா, ருக்மணி வசந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்துக்கு மோசமான விமர்சனங்கள் எழுந்த நிலையிலும் முதல் நாளில் ரூ.150 கோடி வசூலித்து அசத்தியது. கங்கா என்ற காதாபாத்திரத்தில் யஷ்ஷின் சகோதரியாக நயன் தாரா நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் நன்றாக எழுதப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஆங்கில ஊடகம் வெரைட்டிக்கு அளித்த நேர்காணலில் நயன்தாரா பேசியிருப்பதாவது:
கங்கா என்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் தொடர்புடையதாக இருந்தது. ஆமாம். அந்தக் கதாபாத்திரம் மூர்க்கமானதாகவும் பலமாகவும் இருக்கும். புரோமோ காட்சிகளில் பார்த்ததை விட படத்தில் அதிகமாகவே இருக்கிறது.
ஒரு பெண் எளிதில் காயப்படக்கூடியவளாகவும் உணர்ச்சிகள் மிகுந்தவளாகவும் அதே சமயம் அதிகாரமிக்கவளாகவும் இருக்க முடியும். இந்த மாதிரி பலமான கதாபாத்திரம் கொண்டவராக என்னை நானே இயறகையாகவே உணர்ந்திருக்கிறேன். பல வகைகளில் என்னை தொடர்புகொள்ள முடிந்தது. பலம் என்பது எப்போதும் தன்னை கூச்சலிட்டு அறிவித்துக்கொண்டிருக்காது என்பதை வாழ்க்கை நமக்குச் சொல்லித்தரும் என்றார்.
தொடக்கத்தில் இந்தப் படத்தில் நடிக்கக்கூடாது என இருந்தேன் எனவும் பின்னர் கீது மோகன்தாஸ் பேசியதும் மனம் மாறியதாகவும் நயன்தாரா தெரிவித்திருந்தார்.
Summary
Nayanthara on Toxic character Ganga: ‘Her strength doesn’t come from being loud…’
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






