FOLLOW US

ON GOOGLE DISCOVER

திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனுசென்னை புழல் சிறை முதல்வர் விஜய் திடீர் ஆய்வுமாநில அந்தஸ்து! பதவியை ராஜிநாமா செய்யவும் தயார்: புதுவை முதல்வர் என். ரங்கசாமிநாா்வே அரசா் ஹரால்டு காலமானார்! அரசராக பட்டத்து இளவரசர் ஹாகோன் பொறுப்பேற்புதிபெத்தில் அணை உடைந்தது! நேபாளத்துக்கு புதிய எச்சரிக்கை! மீட்புப் பணிகள் நிறுத்தம்!

படம் பிடிக்கவில்லை என்றால் மொட்டை அடித்துக்கொள்கிறேன்: தெலுங்கு நடிகை ஸ்வேதா

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் தெலுங்கு நடிகை ஸ்வேதா லக்‌ஷ்மண் பேசியது குறித்து...

Shiva Kumar Kasaram, Swetha Lakshman.

ஸ்வேதா லக்‌ஷ்மண், ஷிவ குமார் கசாரம். - படம்: எக்ஸ் / சுமாரியா ஸ்டூடியோஸ்.

Published On :28 ஆகஸ்ட் 2026, 1:27 pm IST

தெலுங்கு நடிகை ஸ்வேதா லக்‌ஷ்மண் சஹா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், “எங்களது படம் உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில் நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன்” எனப் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சஹா: லைப் ஆஃப் சஞ்சு என்ற இந்தப் படத்தினை சுமாரியா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் நிஷாந்த் டோட்டி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நாயகனாக ஷிவ குமார் கசாரம், நாயகியாக ஸ்வேதா நடித்துள்ளார்கள்.

இந்தப் படம் வரும் செப்.4ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. நேற்று இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகை ஸ்வேதா லக்‌ஷ்மண் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் புகழ்பெற்ற ஸ்வேதா லக்‌ஷ்மண் முதல்முறையாக திரைப்படத்தில் நடித்துள்ளார். அவர் டிரைலர் விழாவில் பேசியிருப்பதாவது:

எங்களது படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படவில்லை; மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடிக்கவில்லை; ஆனால், கதை ரீதியாக மிகப்பெரியது. மேலும் பெரிய நம்பிக்கையுடன் வெளியாக இருக்கிறோம்.

இந்தப் படம் உணர்ச்சிகளால் உருவாக்கப்பட்டது. இதில் வருவதை நீங்கள் ஒவ்வொருவருவரும் வாழ்க்கையின் எதோ ஒரு கட்டத்தில் அனுபவித்து இருப்பீர்கள். இதில் வலி, தியாகம், உணர்ச்சிகள் இருக்கின்றன. ஒரு முடிவு எப்படி ஒருவரின் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றுகிறதெனச் சொல்கிறது.

இந்தப் படத்தை அனைவரும் பாருங்கள் என கெஞ்சிக் கேட்கவில்லை; மாறாக சவால் விடுகிறேன். இந்தப் படத்தைப் பார்த்தால் நல்ல படமென நீங்களே சொல்வீர்கள். உங்களுக்குப் பிடிக்கவில்லை எனில் பிரபலமான அமீர்பேட்டின் நடு பகுதியில் நின்று நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன். இதன் பொருள் நாங்கள் நல்ல கதையம்சம்சம் உள்ள படத்தை எடுத்திருக்கிறோம் என்றார்.

இந்தப் படத்தின் நடிகர் ஷிவ குமார், “இந்தப் படம் பிடிக்கவில்லை எனில் என்னை அலைபேசியில் அழைத்து திட்டுங்கள்” எனக் கூறியுள்ளார். இந்த விடியோக்கள் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளன.

Summary

I will shave my head if you are disappointed with Saha: Swetha Lakshman

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.