கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

நாயகியாக இருப்பதன் சவால்... ஓராண்டை நிறைவு செய்த வாரிசு தொடர்! நடிகை ஸ்வேதா உருக்கம்!

நடிகை ஸ்வேதா டோரத்தி நடித்துவரும் வாரிசு தொடர் ஓராண்டை நிறைவு செய்துள்ளது குறித்து..

Actress Swetha Dorathi

நடிகை ஸ்வேதா டோரத்தி - இன்ஸ்டாகிராம்

Updated On :

நடிகை ஸ்வேதா டோரத்தி நடித்துவரும் வாரிசு தொடர் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இதனையொட்டி இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள், சக நடிகர், நடிகைகளுக்கு நடிகை ஸ்வேதா நன்றி தெரிவித்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1.30 மணிக்கு வாரிசு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நடிகை ஸ்வேதா டோரத்தி நாயகியாக நடித்து வருகிறார். இவர் மூன்றாம் கண், லாந்தர், பார்க் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் டான் படத்தில் கல்லூரி பேரசிரியையாகவும் நடித்து புகழ் பெற்றார்.

ஸ்வேத டோரத்தி

ஸ்வேத டோரத்தி - இன்ஸ்டாகிராம்

இத்தொடரில் ஸ்வேதாவுக்கு ஜோடியாக நடிகர் ஜெய் ஸ்ரீனிவாஸ் நடித்து வருகிறார். இவர் ஜீ தமிழின் தெய்வம் தந்த பூவே தொடரில் நடித்து கவனம் பெற்றவர்.

ஸ்வேதா டோரத்தி - ஜெய் ஸ்ரீனிவாஸ் என இருவரும் இணைந்து நடிப்பதால், வாரிசு தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அப்பாவை இழந்த இளம்பெண் (நாயகி) தனது குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு கிராமத்தில் இருந்து நகரத்தை நோக்கி குடிபெயர்கிறார். செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன், நாயகியின் குடும்பத்துடன் நெருங்கிய உறவு கொண்டவர். ஆனால், இது இருவருக்குமே தெரியாது. இவர்கள் சந்தித்துகொண்டு நடக்கும் சம்பவங்களே வாரிசு தொடராக எடுக்கப்பட்டு வருகிறது.

2025 ஜூன் 30 முதல் ஒளிபரப்பாகிவரும் இத்தொடர் இம்மாதத்துடன் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கக் கூடிய ஸ்வேதா, ஓராண்டு நிறைவையொட்டி இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்வேதா பதிவிட்டுள்ளதாவது:

''ஓராண்டு. 365 நாள்கள் ஒரே கதாபாத்திரத்தில் இருப்பது என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. முதல் நாள் படப்பிடிப்பில் இருந்து ஒவ்வொரு எபிஸோடும் உங்கள் இல்லத்தை அடைவதற்கான பயணம் மறக்க முடியாதது.

வாரிசு தொடரின் முதன்மை பாத்திரமாக நடிப்பது எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது. சவால்களை சந்திக்கும் திறனை அளித்துள்ளது. நினைவுகளை பரிசளித்துள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு மனமார்த நன்றிகள். அற்புதமான குழு, என் சக நடிகர்கள், இயக்குநர், தொழில் நுட்ப கலைஞர்கள் என ஒவ்வொரு காட்சிக்குப் பின்னாலும் அயராது உழைத்தவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எல்லையில்லான அன்பையும் ஆதரவையும் கொடுத்து இந்த பயணத்தை மேலும் சிறப்பானதாக்கும் ஒவ்வொருவருக்கும் சிறப்பு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒது ஓராண்டு, இந்த கதை இன்னும் தொடர வேண்டும்'' என என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

Summary

Actress Swetha Dorathi Varisu serial completes one year in Zee tamil

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.