விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அழகே அழகு தொடர் 100 நாள்களை நிறைவு செய்துள்ளது.
நாடகத்தனமாக இல்லாமல், நிஜ வாழ்க்கை பாத்திரங்களை அடிப்படியாக வைத்து இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருவதால், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
வசனங்களும் காட்சி அமைப்பும் அழகாக இருக்க வேண்டும் என இழுவையாக இல்லாமல், ஒரு கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் பிரச்னைகளை எதார்த்தமாக பதிவு செய்து வருவதால், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் அழகே அழகு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

அழகே அழகு தொடர் - இன்ஸ்டாகிராம்
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் - வெள்ளி இரவு 7:30 மணிக்கு அழகே அழகு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
செல்லம்மா தொடரில் நடித்த அன்ஷிதா, தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்த நக்ஷத்ரா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். அன்ஷிதாவுக்கு ஜோடியாக குணா குமரன், நக்ஷத்திராவுக்கு ஜோடியாக பிரேம் ஜேக்கப் நடிக்கின்றனர். இவர் நீ நான் காதல் தொடரில் நாயகனாக நடித்திருந்தார்.
இவர்கள் மட்டுமின்றி குறிஞ்சி நாதன், சுனிதா, மதன் குமார் உள்ளிட்ட துணை கதாபாத்திரங்களின் நடிப்பும் இத்தொடருக்கு வலு சேர்த்துள்ளது.
பழமைவாதம் நிறைந்த வீட்டில் அனைத்தையும் சகித்துக்கொண்டு வீட்டு வேலைகளைச் செய்யும் மூத்த மருமகள், அதே வீட்டில் சுயமரியாதையுடன் இருக்க வேண்டும் என நினைக்கும் இளைய மருமகள் என இருவரை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
மருமகள்கள், மாமனார், மாமியார், கணவன்மார்கள் என இவர்களுக்கிடையே நடக்கும் பிரச்னைகளும் முரண்களுமே இத்தொடரின் திரைக்கதை வடிவமாக உள்ளது.
இந்தத் தொடர் தற்போது 100 நாள்களை நிறைவு செய்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக குக் வித் கோமாளியில் அழகே அழகு தொடரின் குழுவினர் பங்கேற்றுள்ளனர்.
Summary
Azhagae Azhagu Serial complete 100 days in vijay tv
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











