/

ரூ. 350 கோடியுடன் 50 நாள்களை நிறைவு செய்த சூர்யாவின் கருப்பு!

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் 50 நாள்களை நிறைவு செய்தது...

News image
Updated On :4 ஜூலை 2026, 3:45 pm IST

நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கருப்பு திரையரங்குகளில் 50 நாள்களை நிறைவு செய்துள்ளது.

இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பாலான ரசிகர்களுக்குப் படம் பிடித்திருந்ததால், அமோக வரவேற்பைப் பெற்றது.

இதனால், நீண்ட காலம் கழித்து நடிகர் சூர்யாவுக்கு திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுடன் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது. மேலும், ஓடிடி வெளியீட்டுக்குப் பின்பும் சில திரையரங்குகளில் கணிசமான ரசிகர்களும் படத்தைப் பார்க்க வருகின்றனர்.

Story image

இந்த நிலையில், கருப்பு திரைப்படம் திரையரங்கங்களில் 50 நாளை நிறைவு செய்துள்ளது. இதனைக் குறிப்பிட்டு ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனம், மாபெரும் வெற்றி என கருப்பு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

The film starring actor Suriya has achieved massive success and completed a 50-day run in theaters.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.