/

திலீஷ் போத்தன் இயக்கத்தில் நடிகர் மோகன்லால்!

நடிகர் மோகன்லாலின் புதிய திரைப்படம் குறித்து...

News image
Updated On :4 ஜூலை 2026, 3:13 pm IST

நடிகர் மோகன்லால் இயக்குநர் திலீஷ் போத்தன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான், துடரும் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து இயக்குநர் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் ஹிருதயப்பூர்வம் என்கிற திரைப்படத்தில் நடித்தார். அப்படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்று ரூ. 100 கோடி வரை வசூலித்தது.

தற்போது, துடரும் இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் அதிமனோகரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், சத்யன் அந்திகாட் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார்.

இந்த நிலையில், மகேஷனிண்ட பிரதிகாரம், தொண்டிமுதலும் த்ரிக்‌ஷாட்சியும், ஜோஜி உள்ளிட்ட படங்களை இயக்கிய திலீஷ் போத்தன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு, நெடும்கண்டம் மிராகிள் (Nedumkandam Miracle) எனப் பெயரிட்டுள்ளனர். பிரபல திரைக்கதை எழுத்தாளர் ஷ்யாம் புஷ்கரன் கதை எழுத, சிஷு காலித் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைக்க உள்ளார்.

நல்ல திரைப்படங்களை இயக்கிய திலீஷ் போத்தன் தற்போது மலையாள சினிமாவின் முக்கியமான நடிகராகவும் அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.

Actor Mohanlal is set to act under the direction of Dileesh Pothan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.