நடிகர் அஜித் குமாரின் புதிய திரைப்படத்தில் மோகன்லால், வெங்கடேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லியைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிப்பது உறுதியானது. ஆனால், அப்படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகளாக ஏகே - 64 அறிவிக்கப்படாமல் இருந்தது.
ரசிகர்களின் பல மாதக் காத்திருப்புக்குப் பின் அண்மையில் இப்படத்திற்கு டேர் டெவில் (dare devil) எனப் பெயரிட்டுள்ளதாகவும் நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலினி இதனைத் தயாரிக்க உள்ளதையும் அறிவித்தனர்.
பிரேவ் ஹார்ட்ஸ் புரடக்ஷன்ஸ் என்கிற பெயரில் ஷாலினி அஜித்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர்கள் மோகன்லால், வெங்கடேஷ் ஆகியோர் நடிக்க ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், மோகன்லால் ஜெயிலர், ஜெயிலர் - 2 திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும், டேர் டெவில் திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Reports indicate that Mohanlal and Venkatesh will be acting in actor Ajith Kumar's new film.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டேர் டெவில் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது?

ஏகே - 64 பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! தயாரிப்பாளர் இவரா?

ஏகே - 64 பணிகள் நிறைவு! அறிவிப்பு எப்போது? இயக்குநர் ஆதிக் பதில்!

அஜித் - 64 திரைப்படத்தின் தயாரிப்பாளராகும் ஷாலினி?
விடியோக்கள்

முதல்வரின் தனித்தீர்மானம்; உதயநிதியின் முழு உரை! | DMK | TVK | CM Vijay




