ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெற்றி விழாவில் கலந்துகொள்ளாத சூர்யா! ஏன்?

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெற்றி விழா குறித்து...

News image
Updated On :18 ஆகஸ்ட் 2026, 6:15 pm IST

நடிகர் சூர்யா விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெற்றி விழாவில் கலந்துகொள்ளவில்லை.

நடிகர் சூர்யா நடிப்பில் திரைக்கு வந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. படத்திற்குக் கிடைத்த நல்ல விமர்சனங்களால் தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படம் இதுவரை உலக அளவில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் வெற்றிக்காக படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் நிகழ்வு சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது. இதில், இயக்குநர் வெங்கி அட்லூரி, நடிகர்கள் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர்.

ஆனால், விழா நாயகனாக நடிகர் சூர்யா இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. பொதுவாக, வெற்றி சந்திப்புகளில் படத்தின் கதாநாயகன் கலந்துகொண்டு நன்றி தெரிவிப்பார். கருப்பு திரைப்படத்திற்குக் கூட சூர்யா கலந்துகொண்டு பத்திரிகையாளர்களுக்கு நன்றி கூறியதுடன் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதனால், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் நிகழ்வுக்கு ஏன் வரவில்லை என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. படப்பிடிப்பு காரணத்தால் கலந்துகொள்ள முடியவில்லையா? இல்லை, மும்பைக்குச் சென்றாரா என குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

It seems actor Suriya did not attend the success celebration of Viswanath & Sons.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.