குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

திருமண வாழ்க்கையில் நுழையும் வாரிசு தொடர் பிரபலங்கள்!

சுர்ஜித் அன்சாரி - காவ்யா அமீரா திருமண நிச்சயதார்த்தம் குறித்து...

News image

சுர்ஜித் அன்சாரி - காவ்யா அமீரா - படம்: இன்ஸ்டாகிராம்

Updated On :29 ஜூன் 2026, 5:54 pm IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வாரிசு தொடர் பிரபலங்கள் சுர்ஜித் அன்சாரி - காவ்யா அமீரா ஆகியோருக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்ட வாரிசு தொடர், குடும்ப உறவுகளை மையப்படுத்தி விஜய்யின் வாரிசு பட பாணியில் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தொடரில் ஜெய் ஸ்ரீனிவாஸ் நாயகனாகவும், ஸ்வேதா டோரதி நாயகியாகவும் நடித்து வருகின்றனர். இந்தத் தொடர் ரசிகர்களின் விருப்பத் தொடராகவே இருந்து வருகிறது.

இந்தத் தொடரில் சுர்ஜித் அன்சாரி - காவ்யா அமீரா ஆகியோர் இணைந்து நடித்து வந்த நிலையில், இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், அண்மையில் சுர்ஜித் அன்சாரி - காவ்யா அமீராவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

யாரடி நீ மோகினி, முத்தழகு, ரோஜா, குலதெய்வம், பைரவி, மகளே என் மருமகளே உள்ளிட்ட தொடர்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் சுர்ஜித் அன்சாரி.

அதேபோல சந்தியா ராகம், கண்ணெதிரே தோன்றினாள் தொடர்களில் கவனம் பெற்ற காவ்யா அமீரா, தற்போது எல்பிடபிள்யூ இணையத் தொடரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சுர்ஜித் அன்சாரி - காவ்யா அமீரா ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்கள், விடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

சுர்ஜித் அன்சாரி - காவ்யா அமீரா ஜோடிக்கு சினிமா, சின்ன திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Summary

An engagement ceremony recently took place for Surjith Ansari and Kavya Ameera, stars of the Zee Tamil serial Varisu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.