அன்னம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் தொடரின் பிரதான பாத்திரங்களில் அயலி இணையத் தொடர் பிரபலம் அபி நட்சத்திரா, கனா காணும் காலங்கள் -2 தொடரில் நாயகனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
மேலும், இத்தொடரில் பிரியங்கா ஷிவன்னா, மனோகர், கார்த்திக், ராஜலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
மாமன் மகனான கார்த்திக்கை(பரத் குமார்) காதலிக்கும் அத்தை மகளான அன்னம்(அபி நட்சத்திரா), ஆனால் கார்த்திக், ரம்யாவை (பிரியங்கா ஷிவன்னா) விரும்புகிறார்.
சூழல் காரணமாக, கார்த்திக், அன்னத்தை திருமணம் செய்துகொள்கிறார். இதற்காக ரம்யா, கார்த்திக்கை பழிவாங்க நினைக்கிறார். இதிலிருந்து கார்த்திக்கை, அன்னம் எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதே இந்தத் தொடரின் மையக்கரு.
அன்னம் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த நிலையில், ஜூலை 6 ஆம் தேதி முதல் இரவு 6.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.
செல்லமே செல்லமே தொடர், இந்த வார இறுதியில் நிறைவடையவுள்ளதால், கயல் தொடர் 7 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The broadcast time of the Annam series has been changed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











