ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரிஜாதம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நடிகை ஆல்யா மானசா நாயகியாக நடிக்கும் தொடரான பாரிஜாதம் தொடரில், இவருக்கு ஜோடியாக அக்ஷய் கமல் நடித்து வருகிறார்.
மேலும், இத்தொடரில் ஸ்வாதி, ராஜ்காந்த், லதா ராவ் உள்ளிட்டோர் நடிக்கிறார். தாயை இழந்த நாயகி ஆல்யா மானசா, பாடகரைத் திருமணம் செய்துகொண்டு புகுந்த வீட்டில் அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
ஆல்யா மானசா, பாரிஜாதம் தொடரில் காதுகேட்கும் தன்மையை இழந்தவராக நடிக்கிறார். மாறுபட்ட கதையில் மானசா நடிப்பதால், இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
பாரிஜாதம் தொடர் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த நிலையில், பாரிஜாதம் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூலை 13 ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
Summary
The broadcast time of the Parijatham serial, currently airing on Zee Tamil, has been changed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











