சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த செல்லமே செல்லமே தொடர் குறுகிய காலத்தில் 170 நாள்களில் நிறைவடைந்துள்ளது.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்தத் தொடர், பிரிந்த கனவன் மற்றும் மனைவிக்கு இடையே சிக்கி தவிக்கும் அவர்களின் குழந்தைகள் கவின் மற்றும் நிலா ஆகியோரை பிரதானப்படுத்தி எடுக்கப்பட்டு வந்தது.
செல்லமே செல்லமே தொடரின் பிரதான பாத்திரங்களில் நடிகை ரேஷ்மா முரளிதரன், ஜிஷ்ணு மேனன் ஆகியோர் நடித்து வந்தனர்.
மேலும், இந்தத் தொடரில் அனுராதா, ராமச்சந்திரன் மகாலிங்கம், சர்வேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இந்தத் தொடரின் நிறைவுப் பகுதி, பரபரப்பான திருப்புமுனை காட்சிகளுடன் ஒளிபரப்பு செய்யப்பட்டு நிறைவடைந்தது.
இந்தத் தொடரின் ரேஷ்மா முரளிதரன் மற்றும் ஜிஷ்ணு மேனன் மற்றும் அவர்களின் குழந்தைகள் அனைவரும் ஒன்று சேர்வதுபோல, கதைக்களம் அமைக்கப்பட்டு தொடர் முடிக்கப்பட்டது.
Summary
The serial Chellame Chellame, which aired on Sun TV, has concluded within a short span of 170 days.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.












