அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

எல்பிடபிள்யூ இணையத் தொடர் படப்பிடிப்பு நிறைவு! வைரல் புகைப்படங்கள்!

எல்பிடபிள்யூ இணையத் தொடர் படப்பிடிப்பு நிறைவடைந்தது தொடர்பாக...

News image

எல்பிடபிள்யூ இணையத் தொடர் படப்பிடிப்பு நிறைவு நாள் புகைப்படங்கள். - படம்: இன்ஸ்டாகிராம்

Updated On :7 ஜூலை 2026, 1:57 pm IST

நடிகர் விக்ராந்த் நடிக்கும் 'எல்பிடபிள்யூ- லவ் பியாண்ட் விக்கெட்' என்ற இணையத் தொடரின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.

ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் எல்பிடபிள்யூ இணையத் தொடரின் புதிய எபிசோடுகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தத் தொடரை அருணா ராக்கி எழுதி, கணேஷ் கார்த்திகேயன் இயக்கி வருகிறார். ‘ஹார்ட் பீட்’ தொடரை தயாரிக்கும் அட்லீ பேக்டரி நிறுவனமே இந்தத் தொடரையும் தயாரிக்கிறது.

எல்பிடபிள்யூ இணையத் தொடர் படப்பிடிப்பு நிறைவு நாள் புகைப்படங்கள்.

எல்பிடபிள்யூ இணையத் தொடர் படப்பிடிப்பு நிறைவு நாள் புகைப்படங்கள். - படம்: இன்ஸ்டாகிராம்

இந்தத் தொடரில் நடிகர் விக்ராந்த், சிந்து ஷியாம், நியதி, ஹரிஷ், அயாஸ் கான், அக்‌ஷிதா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக இருந்த ஒருவர், சில பிரச்னைகள் காரணமாக தனது புகழை இழக்கிறார். பின்னர், அவரே ஒரு கிரிக்கெட் குழுவை உருவாக்கி பயிற்சியாளராக வென்றாரா? என்பதுதான் எல்பிடபுள்யூ தொடரின் கதை.

இந்த நிலையில், 'எல்பிடபிள்யூ- லவ் பியாண்ட் விக்கெட்' இணையத் தொடரின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

எல்பிடபிள்யூ இணையத் தொடர் படப்பிடிப்பு நிறைவு நாள் புகைப்படங்கள்.

எல்பிடபிள்யூ இணையத் தொடர் படப்பிடிப்பு நிறைவு நாள் புகைப்படங்கள். - படம்: இன்ஸ்டாகிராம்

'எல்பிடபிள்யூ- லவ் பியாண்ட் விக்கெட்' இணையத் தொடர் வரும் ஜூலை 23 ஆம் தேதி முடிவடையவுள்ளது.

ஹார்ட் பீட் தொடரின் 3 ஆம் பாகம் ஜூலை 30 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வியாழக்கிழமையில், இந்தத் தொடருக்கு மாற்றாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

Summary

Filming for the web series 'LBW – Love Beyond Wicket', starring actor Vikranth, recently concluded.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.