பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்! அதிமுக இரு தரப்பு மனுக்கள் மீது நாளை முடிவு! பேரவைத் தலைவர் அதிமுகவிலிருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டது! பதவி ஆசை இல்லை! எஸ்.பி. வேலுமணி தில்லியில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு வரவேற்பு!கர்நாடக முதல்வர் சித்தராமையா நாளை ராஜிநாமா? குண்டர் தடுப்புச் சட்ட ரத்து வழக்கு! உயர் நீதிமன்றத்தில் காத்திருக்கும் முன்னாள் காவல் ஆணையர் அருண்!இணையும் அதிமுக: இபிஎஸ்ஸுடன் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு!பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை!பினராயி விஜயன் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
/

கல்யாண கலாட்டா... கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி குறித்து...

News image

கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ் இணையத் தொடர் - படம்: ஜியோ ஹாட் ஸ்டார்

Updated On :27 மே 2026, 6:42 pm IST

கல்யாண வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ் இணையத் தொடர் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

26 ஆண்டுகளுக்கும் மேலாக ஆறு உறவினர்களின் வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் ஏழு திருமணங்கள் மூலம் ஒரு காதல் மலர்கிறது.

இந்தக் காதல் கதையை பிரதானப்படுத்தி இந்தத் இணையத் தொடர் எடுக்கப்படுகிறது.

'கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ்' தொடரை விஷ்ணு சந்திரன் மற்றும் கண்ணன் தாமரைக்குளம் ஆகியோர் இயக்கியுள்ளனர். சித்தார்த் பாபு, நைனிடா மரியா, கிருஷ்ணா விஜயச்சந்திரன் மற்றும் மன்யா மல்லிகா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குழந்தைப் பருவத்தில் இருந்து பெரியவர்களாக மாறும் பயணத்தை நகைச்சுவை மற்றும் கலகலப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் உடன் பார்க்கும் தொடராக 'கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ்' உள்ளது.

Story image

குடும்ப பிணைப்பு, கல்யாண வீட்டில் நடைபெறும் கலாட்டா, உறவுகளுக்குள் நடக்கும் பிரச்னைகள் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தத் தொடர் மே 29 ஆம் தேதி முதல் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்தத் தொடரின் புதிய நான்கு எபிசோடுகள் வெளியாகும். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் 'கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ்' இணையத் தொடர் வெளியாக உள்ளது.

Summary

The web series Cousins ​​and Kalyanam, centered around events taking place at a wedding house, is set to be released on the Jio Hotstar OTT platform.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.